Sourashtra Time
NOW AVAILABLE IN READY STOCK. RUSH YOUR ORDER FOR hiinun caLisye, hitavun caLisye and cunuk caLisye for Rs. 250/- ONLY.
Advertisement
Hamsathwani

ஸெளராஷ்ட்ர மொழி திரை விமர்சனம்:

ஹம்ஸத்4வனி

ஸ்ரீமந் நடனகோபால நாயகி சுவாமிகளின் வாழ்க்கை வரலாற்றை மும்பை மோதிலால் சாந்தி எண்டர்பிரைசர்ஸ் நிறுவனத்திலிருந்து திரைப்படமாக தயாரித்துள்ளார். இமிடேஷன் ராம்லால் கதை வசனம் எழுதி இயக்கியுள்ள இப்படத்திற்கு ஹம்ஸத்4வனி என்னும் பெயரைச் சூட்டி இருக்கிறார்கள். இயக்குனர் சில காட்சிகளில் மட்டுமே வருகிறார். படத்தில் காட்சி அமைப்புகள் சிறப்பாக இருக்கிறது. வெளிப்புற படப்பிடிப்புக்கான இடத்தேர்வு ரம்மியமாக உள்ளது. ராமபத்ரன் பாத்திரத்தை ஏற்றுச் செய்துள்ள சீனிவாசன் நல்ல ரசனையுடன் பாத்திரத்தோடு ஒன்றியுள்ளார். பெற்றோர்களிடம் சந்நியாசம் பெற்றுக்கொள்ளும் காட்சி மனதை உலுக்கியது. 


நாகலிங்க அடிகளைத் தேடி பரமக்குடி செல்லும் பாதையில் ஜோகின் மெந்தொ கோன் ஸங்கி3ரெபா3 என்ற கீர்த்தனையை அமைத்தது சூழ்நிலைக்கேற்றதாக அமைந்துள்ளது. இராமநாதபுரம்ää சிவகங்கை அரண்மனைக் காட்சிகள் படமாக்கியுள்ளது நன்றாக இருந்தாலும் நடன காட்சி திரையுலகின் பழைய உத்தியாக தெரிந்தது. ராம்தாஸ் மற்றும் செயபால் இருவருக்கும் பொருத்தமான வேடம். 


திருப்பதி தேவஸ்தான பற்றி பாடல்காட்சியில் வேறு ஒரு வீடியோ படத்தை இணைத்திருப்பது அப்பட்டமாக தெரிகிறது. இருந்தாலும் ரசிகர்களுக்கு அது ஒரு குறையாக படவில்லை. ஜீயர் சுவாமிகளாக தாமோதரன் வரும்போது ஆரவாரமின்றி இருந்தது. நாயகி பாவத்துடன் அப்பன்ராஜ் வந்து மனதை தொடுகிறார். அவருக்கு காட்சிகள் மிகக் குறைவுதான். உஞ்சவிருத்திக்கு ஒரு உதாரணமாக பவரோக் பரஹோய் பகவந்நாமம் மிட்டாய் என்ற அதிகமாக யாரும் பாடாத கீர்த்தனையை படமாக்கியுள்ளது சிறப்பாக இருந்தது. 


இறுதிக்காட்சியில்  நாயகியாக திருமல்ராவ் எடுப்பான தோற்றத்துடன் வந்து ஹரி அவ்டியோ என்று இறைவனோடு ஐக்கியமாகும் காட்சி கிராபிக் வேலையாக இருந்தாலும் ரசிக்கும்படி இருந்தது. நாயகி சுவாமிகள் வாழ்க்கையில் நடந்ததாக செவிவழிச் செய்தியாக கேள்விப்பட்ட எதுவும் படமாக்கப்படவில்லை. இறுதிக்காட்சி ஜீவசமாதி படமாக்கப்பட்டிருக்கும் என்று ஆர்வத்தோடு பார்த்தவர்களுக்கு ஏமாற்றம்தான். விண்ணிலிருந்து ரதம் வந்து சுவாமிகள் அதில் செல்வதாக படமாக்கியிருப்பது ஜீரணிக்க முடியவில்லை. 


படத்தொகுப்பு நன்றாக உள்ளது. இசை சங்கர் ராஜா. மனதில் நிற்கிறார். ஒளிப்பதிவு பெயர் எடுக்கவேண்டும் என்று சிரத்தையுடன் சிவக்குமார் மற்றும் அவருக்கு உதவியாக ரவிக்குமார் பணியாற்றியுள்ளதை உணரமுடிகிறது. ஒருங்கிணைப்பு எல்.ஆர்.எஸ். மொத்தத்தில் இந்த டெலிபிலிம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெறும் என்று நம்பலாம். -சூர்யா ஞானேஸ்வரன்  

 

User Comments
Information
Name
Comments
 
Verification Code
4 + 8 =