Sourashtra Time
NOW AVAILABLE IN READY STOCK. RUSH YOUR ORDER FOR hiinun caLisye, hitavun caLisye and cunuk caLisye for Rs. 250/- ONLY.
Advertisement
Kaalam

காலம்!

எழுத்தாளர்களிடமிருந்து பெற்ற படைப்புகளை நல்லமுறையில் வடிவமைத்து தனித்தாளில் எழுதி அதை அச்சகத்தில் கொடுத்து அவர்கள் அச்சு கோர்த்து பிரதி எடுத்து கொடுப்பார்கள். அதை சரிபார்த்து கொடுத்தப்பின் திருத்தம் செய்து அச்சேற்றி கொடுப்பார்கள். அதனை நாம் பைண்டிங் செய்து பிறகு சந்தாதாரர்களுக்கு தபால் மூலம் அனுப்பி வைப்போம். அதன் பிறகு அந்த இதழின் வாசகர்கள் கருத்துக்களை அறிந்து கொள்ள காத்திருப்போம். வாசகர்களிடமிருந்து கடிதங்கள் வரும்பொழுது எங்கள் உற்சாகம் - ஊக்கம் அதிகரிக்கும். இது ஒரு காலம்!

இப்போது ஸெளராஷ்ட்ர டைம் - இ பத்திரிகையாக வெளிவருகிறது.

முன்பு செய்த அதே பணிதான். ஆனால் காலம் மாறிவிட்டது. நாம் எழுதும் கருத்துக்கள் காலதாமதம் இல்லாமல் வாசகர்களை சென்றடையும் - அதுவும் உலகளாவிய அளவில் உடனுக்குடன்! இது இன்றைய காலம்! அதுதான் கணினி தொழில் நுட்ப வளர்ச்சி!

அங்கலாய்ப்புடன் பார்க்கும் அடிப்படை வாழ்வில் உள்ளவர்கள் முதல் வானளாவ வளர்ந்துள்ள தொழில் மேதைகள் - விஞ்ஞானிகள் என்று அனைத்து தரப்பிலும் வியாப்பித்துள்ளது கணினி தொழில் நுட்பம். அவரவர் தேவைக்கேற்ப பயன்படுத்தி வருகின்றனர்.

நாமும் வலை தளத்தின் மூலமாக நம் சமூக மக்களுக்கு மிக எளியமுறையில் கையாளும் விதத்தில் வடிவமைத்து ஸெளராஷ்ட்ர டைம் e-journal ஆக வெளியிடுகிறோம் என்பதை பெருமையுடன் கூறி உங்கள் முன் சமர்ப்பிக்கிறோம்.

அன்புடன்

எஸ். டி. ஞானேஸ்வரன்

ஆசிரியர்

 


 

User Comments
R.N. Sadasivan
I wish my Sub-Editor Gnaneswaran every success in bringing out his own journal SOURASHTRA TIME as e-journal. I appeal sourashtra people to support in all possible ways. Sadasivan, Editor, MOTHI RETHTHU.
Information
Name
Comments
 
Verification Code
4 + 8 =