Sourashtra Time
NOW AVAILABLE IN READY STOCK. RUSH YOUR ORDER FOR hiinun caLisye, hitavun caLisye and cunuk caLisye for Rs. 250/- ONLY.
Advertisement
sourashtra club

ஸெளராஷ்ட்ர கிளப் - இப்போதைய நிலை

சூர்யா ஞானேஸ்வர்

ஸெளராஷ்ட்ர மக்களின் ஒற்றுமைக்கும் கலாச்சார பாதுகாப்பிற்கும் சபைகள் உருவாக்கப்பட்டது. மதுரையில் முதன்முதலில் இராமியா. கே.வி. ராமாச்சாரி அவர்களால் ஸெளராஷ்ட்ர சபை உருவானதும் தொடாந்து ஒவ்வொரு செயல்பாட்டிற்கும் ஓர் அமைப்பு என்ற ரீதியில் உழைத்துக் களைத்த மனதிற்கு ஓய்வு தரும் விதத்தில் ஆறுதலாக ராஷ்ட்ரபந்து எல்.கே.துளசிராம் அவர்களின் முயற்சியால் ஸெளராஷ்ட்ர கிளப் உருவாக்கப்பட்டது. ஆங்கிலேயர்களால் நடத்தப்பட்ட கிளப்பில் உறுப்பினராக இருந்த இவர் நம் சமூக மக்களுக்கு பயன்படும் வகையில் கிளப் உருவாக்க இடத்தை ஆங்கிலேயர்களிடமிருந்து கேட்டுப் பெற்றதாக கூறப்படுகிறது. அதுதான் தற்போது மதுரை தெப்பக்குளத்தின் கிழக்கே அமைந்துள்ள ஸெளராஷ்ட்ர கிளப்.

இன்றைய தினம் அங்கே பெயர் பலகை கூட காணமுடியாது. நல்ல காற்றோட்ட வசதியுடன் கூடிய சுமார் மூன்று செண்ட் பரப்பளவில் உள்ள இந்த இடம் ஸெளராஷ்ட்ர கனவான்கள் தொழிலதிபர்கள் என்று குறிப்பிட்ட சிலர் மட்டுமே நிர்வகித்து வந்தனர். ஸெளராஷ்ட்ர கிளப் என்ற பெயரைக் கேட்டதும் சாமான்ய சமூகத்தினர் யாரும் உள்ளே செல்ல முடியாது என்ற உருவகத்திற்கு உதாரணமாய் இருந்தது. இப்படிப்பட்ட இடத்தில் சமூகத்தினர் அனைவரது பார்வையும் படும்விதத்தில் பல புதுமைகள் செய்து ஈர்க்கவேண்டும் என்ற கருத்தில் ஒருசிலரது நடவடிக்கையால் இப்போது இரண்டு கோஷ்டிகளாகி கிளப்பை பராமரிக்கும் திறனற்றுப் போய்விட்டார்கள். 

இதில் நகைப்பூட்டும் செயல் என்னவென்றால் இரண்டு கோஷ்டிக்கும் ஒரே தலைவர். அந்த தலைவரால்கூட சமாதனப்படுத்தி ஒருங்கிணைக்க இயலவில்லை. இருந்தாலும் தனது தலைமையை தக்க வைத்துக்கொள்வதில் கவனமாக இருக்கிறார். முன்பிருந்த நிர்வாகத்தில் சுமார் 107 உறுப்பினர்கள் இருந்ததாகவும் தற்சமயம் புதிதாக 210 உறுப்பினர்கள் சேர்க்கப்பட்டுள்ளதாகவும் தகவல். இந்த 210 உறுப்பினர்கள் பதிவாளரால் அங்கீகரிக்கப்பட வில்லை என்றும் கூறப்படுகிறது. இந்த லட்சணத்தில் போய்க்கொண்டிருக்கும் கிளப்பின் பின்பகுதியில் ஒரு குறிப்பிட்ட அந்நிய சமுதாயத்தினர் குறிப்பிட்ட பகுதி தங்களுக்குச் சொந்தமானது என்று ஓர் ஆவணம் தயார்செய்து காட்டுகின்றனர். அவர்களையும் இவர்களால் அப்புறப்படுத்த முடியவில்லை. 

சட்டரீதியான நடவடிக்கையில் ஈடுப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. ஒரு நாள் இரவு சுமார் 8.00 மணியளவில் கிளப்பிற்கு சென்றபோது அங்கே உறுப்பினரும் ஜனாதிபதி விருது பெற்ற திரைப்பட இயக்குநர் தேவதாஸ் அமர்ந்திருந்தார். இருட்டில் அமர்ந்திருக்கிறாரே என்று கேட்டபோதுதான் அவர் சொன்ன தகவல் அதிர்ச்சியாக இருந்தது. பவர்கட். பவர்கட் என்றால் மின்வாரியத்திற்கு பில்பணம் கட்ட வில்லை. அதனால் பவர்கட். அசிங்கமான முன்னுதாரணம். வசதி படைத்த பிரமுகர்கள் உள்ள கிளப்பிற்கு கரண்ட் பில் கட்ட யாருக்கும் இயலவில்லையாம். மறுநாள் தேவதாஸ் தன் சொந்த பணத்தில் பில் கட்டிவிட்டு வந்ததாக ஜுட்டிசன் பத்திரிகை மூலம் தெரிந்து கொள்ள முடிந்தது. ஸெளராஷ்ட்ர கிளப் விஷயமாக ஆரம்பம் முதல் அலசி வருவதும் இந்தப் பத்திரிகையே.

ஸெளராஷ்ட்ர மத்ய சபைத் தலைவர் இது விஷயமாக ஸெளராஷ்ட்ர பத்திரியாளர்களைஅழைத்து பேசினார். இந்த இரண்டு கோஷ்டியையும் சமாதானப்படுத்தி ஒன்றுசேர்த்து இன்னும் உறுப்பினர்களை சேர்த்து ஜனநாயகப்படி தேர்தல் வைத்து நிர்வாகிகளை தேர்ந்தெடுக்க செய்ய வேண்டும். அதுவரை ஒவ்வொரு அமைப்பிலிருந்தும் ஒருவர் என்ற ரீதியில் ஒரு அட்டாக்கமிட்டி நிறுவி செயல்பட வேண்டும். அதற்கான முயற்சியில் இறங்கி கிளப்பை காப்பாற்ற போவதாக கூறினார். இந்த கோஷ்டிப்பூசலால் உள்ளே நுழைந்து ஆக்கிரமித்துள்ள அந்நியர்களை வெளியே அனுப்பவும் எந்தவித துரித நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை. 

கிளப் பைலாவில் ஒரு உறுப்பினர் சேர இரண்டு உறுப்பினர்கள் முன்மொழிதல் வழிமொழிதல் என்ற முறை உள்ளது. இந்த முறைப்படி சேர்க்காத காரணத்தால் தான் எதிர் கோஷ்டி என்று சொல்லப்படுகிறவர்களால் சேர்க்கப்பட்ட 210 உறுப்பினர்கள் பதிவாளரால் அங்கீகாரம் செய்யப்படாமல் நிலுவையில் இருத்தி வைக்கப்பட்டுள்ளதாகவும் தேவதாஸ் தகவல் கூறினார். 

இந்த கிளப்பில் தற்சமயம் பேட்மிட்டன் ஆடும் இண்டோர் கேம் ஸ்டேடியம் கட்டப்பட்டுள்ளது. மேலும் வாலிபால், டென்னிஸ், இறகுபந்து போன்ற ஆடுகளம் சீரமைக்கப்பட்டுள்ளது. இதுபோக கேரம், செஸ் போன்ற விளையாட்டுக்களிலும் பளு தூக்கும் பயிற்சி, யோகா பயிற்சி போன்று விஸ்தரிக்கப்பட்டு இன்றைய இளைஞர்களை கவர்ந்துள்ளது. 

ஒரு சில கூடாத பழக்கவழக்கங்களால் கிளப்பின் செல்வாக்கு சரிந்து போனநிலையில் பொருளாதாரமும் நலிவடைந்து விட்டது என்றப் போக்கினை மாற்றியமைத்திட இந்த சமயத்தில் சமூகப் பெரியோர்கள் பெரிய மனதுடன் தங்களது கோஷ்டி மனப்பான்மையை விட்டுவிட்டு சமாதானமாகி சட்ட ரீதியாக என்ன-எப்படி செய்யவேண்டுமோ அவற்றை முறையாக செய்து உறுப்பினர்களை அதிகமாக்கி நம் முன்னோர்கள் நமக்காக விட்டுச்சென்ற சொத்தினை முற்றிலும் சமூகத்திற்கே பயன்படும்படி செய்ய வேண்டும். உங்களால் அது இயலவில்லை என்றால் புதிதாக நிர்வகிக்க வரும் இளைய சமுதாயத்தினரிடம் ஒப்படைத்துவிட்டு கௌரவமாக ஒதுங்கிக் கொள்ளுங்கள். அதுதான் சமூகத்திற்கும் நல்லது. உங்களுக்கும் பெருமையாக இருக்கும்.

இன்றைய இளைஞர்கள் அனைத்து துறையிலும் திறமையாக நிர்வகிக்கக் கூடியவர்கள். அவர்கள் கையில் கிளப் சென்றால் அதன் துரித வளர்ச்சியைக் கண்டு பிரமிப்படைவீர்கள். உண்மையில் சமூகத்திற்காகப் பாடுபட வருவோரை ஏளனத்துடன் பார்க்கும் தன்மையை விடுத்து குடும்பச்சொத்தாக பாவிக்கும் தன்மைக்கு விடுதலை அளித்து சமூக வருவாய் பெருகச் செய்ய ஒரு வாய்ப்பினைக் கொடுத்துப் பாருங்கள். வாய்ப்பினை பறித்துக் கொள்ளும் அளவிற்குச் செல்ல வேண்டாம். 107ம் 210ம் என அனைவர் துணையுடன் ஆயிரமாக்கி சேவையை ஆல்போல் விரிவாகச் செய்ய ஒன்று கூடுவோம்! 

விரைவில் ஒரு நல்ல முடிவு கிடைக்கும் என்ற நம்பிக்கையில் சமூக நலன்கருதி எழுதப்பட்ட இந்தக் கட்டுரையில் யாருடைய பெயரும் குறிப்பிடப்படவில்லை. ஆட்டம் காட்டும் பிரமுகர்களின் பெயர் பட்டியலோடு அவர்கள் செயல்பாட்டினையும் குறிப்பிட்டு எழுதும் தன்மைக்கு நம்மை ஆளாக்கமாட்டார்கள் என்றே நம்புகிறேன். 

 

User Comments
chandraprakash skb
super
Subramanian Obula, Madurai
avre samuuhammu chalariyo addi unnaan, avre bhaaShaamuus likketi, annatturaan chevdi saanaan. avre ghenam ami kabaLLuvaayi.
Jawaharlal Jutti Ramamurthy
nicely written Surya Gnaneswar
Rameshkumar V
Well said by Surya Gnaneswar.All our community people must realise the situation and act for the develoment of our community.
Shyam Sundar, Thuckalay
Your intention is well and welcome Surya Gnaneswer.
surendran K.R.
உண்மை ஒரு நாள் வெளிவரும்.
Information
Name
Comments
 
Verification Code
4 + 5 =