Sourashtra Time
NOW AVAILABLE IN READY STOCK. RUSH YOUR ORDER FOR hiinun caLisye, hitavun caLisye and cunuk caLisye for Rs. 250/- ONLY.
Advertisement
uruthimozhi...Shreyangam

ஸ்ரேயங்க3ம்:


Vol.4 16th September  2016 Issue: 2


 

உறுதிமொழி ஏற்போம்!

 

உள்ளாட்சி தேர்தல் நெருங்கிவிட்டது. தேர்தல் கமிஷனும் தேர்தலை நடத்த தம்மை தயார்ப்படுத்திக் கொண்டிருக்கிறது. அனைத்து அரசியல் கட்சிகளும் தேர்தலை எதிர்கொள்ள தயாராகிவிட்டது. மாநகராட்சி, நகராட்சி, ஊராட்சி, பேரூராட்சி என்று அனைத்துப் பகுதிகளிலும் நம் ஸெளராஷ்ட்ரர்கள் வியாப்பித்துள்ளனர். அவரவர் பகுதிகளில் அவரவர் செல்வாக்குகள் அதிகம் காணப்படும். சிலர் கட்சி ரீதியாகவும் சிலர் தனிப்பட்ட முறையிலும் காணப்படுவார்கள். 


தற்போது ஆளுகின்ற அரசு அனைத்து உறுப்பினர்களையும் மக்கள் தேர்ந்தெடுத்தப்பின்னர் மேயர் நகரசபைத் தலைவர் பதவிகளுக்கு உறுப்பினர்கள் மூலம் தேர்தல் நடைபெறும் என்று அறிவித்துள்ளது. இதனால் ஆளுங்கட்சி மேயர் நகரசபைத்தலைவர் ஊராட்சி பேரூராட்சி தலைமைப்பதவி என்று அனைத்தையும் தக்கவைத்துக் கொள்ள செய்த உத்தி என்று பலராலும் பேசப்படுகிறது. இருந்தாலும் நாம் இந்த உள்ளாட்சி தேர்தலில் நம் சமூக மக்கள் அதிகமாக வாழுகின்ற பகுதிகளில் பிரதான அரசியல் கட்சிகள் நம் சமூக வேட்பாளர்களை முன்னிறுத்தவும் முக்கியமான பதவிகளை நம் சமூக மக்களுக்கு கிடைக்கும்படி செய்யவும் நாம் வரிந்துக்கட்டிக் கொண்டு செயல்பட வேண்டும்.


வார்டுகளில் தனிப்பட்ட செல்வாக்கு உள்ளவர்கள் வேட்பாளர்களாக தேர்வு செய்யப்படும் வாய்ப்பு இந்த உள்ளாட்சி தேர்தலில் மட்டுமே உண்டு. உறுப்பினர்களாக தேர்வாகும் வேட்பாளரின் வெற்றி அவர்களை ஒரு மேயராகவோ நகரசபைத் தலைவராகவோ ஊராட்சி மன்றத்தலைவர் பேரூராட்சி தலைவர் என்று தலைமைப் பதவிக்கு தேர்வாகும் அதிர்ஷ்டமும் வாய்ப்பும் உருவாகப் போகிறது என்ற எதிர்பார்ப்பில் நாம் கனவு காண்போம். அந்த கனவுக்கு உயிர் கொடுக்க நாம் ஒரு குறிக்கோளோடு உழைப்போம். நமது முன்னோர்கள் அமர்ந்து பெருமை சேர்த்த பதவிகளில் நம்மில் சிலர் அமர்ந்து சேவை செய்து அவர்கள் காட்டிய நல்வழியில் நடந்து அவர்கள் சார்ந்த கட்சிக்கும் நம் சமூகத்திற்கும் பெருமை சேர்க்க பாடுபடுவோம் என்று உறுதிமொழி ஏற்போம். 

 

User Comments
Information
Name
Comments
 
Verification Code
3 + 7 =