Sourashtra Time
NOW AVAILABLE IN READY STOCK. RUSH YOUR ORDER FOR hiinun caLisye, hitavun caLisye and cunuk caLisye for Rs. 250/- ONLY.
Advertisement
Panchal Charithru

பஞ்சல் சரித்ரு 

வடமொழி ஒடிஸியில் ஜெயதேவர் நௌகா சரித்ரு என்ற இசை நாடக நூல் எழுதினார். இது மூலநூலாகும். சமஸ்கிருதத்தில் கவி. வேங்கடஸ{ரி காவியமாக இயற்றியுள்ளார். இது வழி நூலாகும். வேங்கடரமண பாகவதர் சமஸ்கிருதத்தில் உள்ள நௌகா சரித்ருவை தியாகராஜ சுவாமிகளிடம் இசைப்பட பாடிக் காட்ட அதை அப்படியே தெலுங்கில் தியாகபிரும்ம் எழுதியதாக வரலாறு. அவர் தெலுங்கில் எழுதிய காவியத்தை ஸெளராஷ்ட்ர மொழியில் சேலம் ஸ்ரீபுட்டா அழகார்யர் இசை நாட்டிய நாடகமாக நமக்கு அருளியுள்ளார். இது சார்பு நூலாகும். 


இந்த நூல் சேலம் ஸ்ரீ ஜி.எம். ரெங்கநாயகலு அய்யர் அவர்களிடம் இருந்தது. இதனை புத்தகமாக வெளியிட விருப்பம் தெரிவித்து அவரிடம் கேட்டபோது இந்த நூல் முழுமையும் இசை நாடகமாக உள்ளதால் இசைத்துறையில் சம்பந்தப்பட்ட ஒருவரிடம் காட்டி அவர்மூலமாக பாடல்களை வரிசைப்படுத்தி அர்த்தங்களோடு வெளியிடப்போவதாக கூறி என்னை நிராகரித்தார். அதன்பின்னர் கோவை ஸ்ரீமதி. சரோஜா சுந்தர்ராஜன் அவர்களை தொடர்பு கொண்டு அவர் விரும்பியபடியே பாடல்களை வரிசைப்படுத்தினார். ஆனால் அவர் அர்த்தங்களை எழுதி தர காலம் தாமதம் ஏற்பட்டதால் மூலம் முழுமையுமாக தொகுத்து திரு. ரெங்கநாயகலு அய்யர் புத்தகமாக வெளியிட்டார். இருந்தாலும் தன்னிடம் கொடுக்கப்பட்ட பணியை செவ்வனே செய்து முடிக்க வேண்டும் என்பதில் மிகுந்த ஆர்வத்துடன் இருந்த சரோஜா அம்மையார் மிகுந்த சிரத்தையுடன் பஞ்சல் சரித்ரு முழுமைக்கும் தமிழில் அர்த்தம் எழுதியுள்ளார். அதனை புத்தகமாக வெளியிடும் வாய்ப்பு மீண்டும் என்னிடம் வந்தபோது நான் மிகவும் மகிழ்ந்தேன். தெய்வ சங்கல்பம் என்பது இதுதானோ!


இந்த பஞ்சல் சரித்ருவில் அழகார்யர் ஸரிகமபதநிஸ என்ற சங்கீத ஸ்வரங்களுக்கு ஸெளராஷ்ட்ர மொழியில் பேச்சு வழக்கில் உள்ள வார்த்தைகளாக பொருள் தந்து இந்த காவியத்தில் உள்ள பாடல்களில் அமைத்துள்ள அதிசயம் அவருடைய இசைத்துறை ஞானத்திற்கு நல்ல சான்று. அவர் குறிப்பிட்ட இந்த ஸ்வர ஸாஹித்யங்கள் ஸெளராஷ்ட்ர மொழியில் பொருள் பட பேச்சு வழக்கில் உள்ளவற்றை ரசனையோடு விளக்கம் கொடுத்துள்ளார் ஸ்ரீமதி சரோஜா சுந்தரராஜன் இக்கட்டுரையில். அவர் நுகர்ந்த அந்த இலக்கிய இன்பத்தினை நாமும் நுகர்வோம். –ஆசிரியர்.


கோபிகான் பஞ்சல் யாத்ராக் கீஷ்டுஸெரொ நிக்3ளிஜநி


ஓம் க3ம்

யாதவகுல சாந்து கீஷ்டுக் பெ4ளிசாது3ரு பஞ்சலி

யாத்ராக் பொ3ல்லிஜநொ கிஸோதீ மெந்லி

கீ3துநு ஸரிக3ம பத3நிஸ ஸ_சநாம் க3வ்லநு

ப்ரேமிநு ப4க்திரு பரம்லவுரூpய அபி4லாவுரூpநு


அலங்கார்லிகிநு நிகி3ள்யாஸி

சுரபி ராகு  ஆதி தாளு

முல்லவி (பல்லவி)

அலங்கார்லிகிநு நிகி3ள்யாஸி

ஹரிதே3வு கீஷ்டு ஸெரொ கோ3பிநு (அலங்கார்லிகிநு)


ப2ல்லவி (அனுபல்லவி)

புலகாங்கிதுகநு ப்ரீதிர் ஸிங்கர்லி - ஸத்

போ4கு3 நாரிநு கெர்யாஸி கித்தக விநோது3நு (அலங்கார்லிகிநு)


சரணுன் (சரணங்கள்)

ஹஸில்லி நசிக2ளிநி யேகீ? – பொ4ய்ஞ்மு

குஸ_முந் சொக்பு2லிநி யேகீ?

பு2லிநி யோகு3ம் பி2லிநி யேகீ? – கீஷ்டுகெ

வஸொ ஹொய்லி கொஞ்சுத ஸநி ஸநி யேகீ – உத்ஸாவுரு (அலங்கார்லிகிநு)


நொவ்ரொ எநோஸி மெந்லிநி யேகீ?

ஸெளகா3ரிர் ஹோட்கர்லிநி யேகீ?

அம்தெனொ ஹொய்யேஸி மெந்லிநி யேகீ – கீஷ்டு

க3ரிஸநிம் நிரஜ பத3 பத3மு யேகீ – உத்ஸாவுரு (அலங்கார்லிகிநு)


சொக்கருல் லாஸிநி யேகீ – கோ3பிநுக் கீஷ்டு

த4க்கொவா மெநி தா4ம்தெ4ர்தி யேகீ?

லுக்கே2ளு ஆவிமெநி பொ3வ்நி யேகீ? – கிலீசுந்ரஹித

ஜூ2க்கு ப்ரீதிர் விடொ3தெ3நி யேகீ – உத்ஸாவுரு (அலங்கார்லிகிநு)


ஸிர்கண் லவ்நிநி யேகீ? - ஸாக்சாத்

ஸெளபா4க்யு யேஸி: மெந்லிநி யேகீ?

த்3விதமுந் தூ3ர் கெர்லிநி யேகீ?

பத3பத3ம் மகி3 ப்ரார்திநி யேகீ – உத்ஸாவுரு (அலங்கார்லிகிநு)


ஸ_ந்த3ரங்கா வேகி3 ஸரிக3ரி கா3விமெந்நி யேகீ

ஸ_சநாந் கெரி ரிதரிக3மக3நு பொ3வ்நி யேகீ?

ஸிந்து3ஜாபதி நந்த3ஜா ஆவி மெந்நி யேகீ

நந்த3 நரஸிம்ஹா மெந்நி யேகீ – உத்ஸாவுரு (அலங்கார்லிகிநு)


 

க2டின் ஸப்தா3ர்துந்:

பன் + சலி = பஞ்சலி அதாவது பனிம் சலன் வாஹனொ – நௌகா

சாது3ரு – புத்திசாலித்தனமாக

கிஸோதீ – எப்படியாவது

ஸரிக3ம பத3நிஸ ஸ_சனாம் - ஸங்கீத் ஸ்வரங்களை பொருள் தரும் வகையில் அமைத்துப்பாடி குறிப்பு தந்து 

பரம்லக்சிய அபி4லாக்சிநு – பரமபதம் நாடும் லட்சியத்துடன் பரமபதத்தை வேண்டி வரம் கேட்கும் பெண்கள்.

அபி4லாக்சிநு – பஜெ மெல்லுநார்

குஸ_முந் - வாசைன மலர்கள்

சொக்பு2லினி – நன்றாக மலர்ந்தது (கோபியரின் மகிழ்ச்சியானது g+மியில் மலர்கள் மலர்ந்தது போல் இருந்ததாம்)

பு2லினி யோகு3ம் - மலரும் மனதுடன் ஒன்றாகி

(யோகு3ம்) பு2லினி – வஸ்திரங்களை உடுத்துவது இப்படித்தானோ

ஸனி ஸனி – பார்க்கும் பார்வை (ஸங்கீத ஸ்வரங்கள் நல்ல பொருளுடன் வந்தது)

எநோஸி - இவனேதான்

ஸெளகா3ரிர் - சுப முடிச்சு (மணமகனுடன் மணமகளின் ஆடையினை சேர்த்து போடும் முடிச்சு (கிருஷ்ணனுடைய துப்பட்டாவுடன் தமது முந்தானை முடிச்சினை பலமாக இறுக்குதல்)

யேகீ? -- இவ்விதமோ?

க3ரிஸநிம் - ஆழ்ந்து பார்க்கையில் (ஸங்கீத ஸ்வரம்)

நிரஜ - என்றும் அழியாத

பத3பத3மு – உயர்ந்த பரமபதம்

சொக்கருல்லாஸிநி – நன்றாக ஆனந்த உலா வருதல்

த்3விதமுன் - இரட்டைமனம் (செய்வதா வேண்டாமா)

வேகி – உம், ஆகட்டும்

ஸரி – ஆகட்டும் 

க3ரி – ஆழ்ந்த

கிலிசுந் - அழுக்கு, பாவம், அசிங்கம் (கிலீசு – நீச காமம்)

ரஹித - இல்லாத

ரித – நல்ல ஆசாரம்

ரிக3மக3நு – பழக்கத்துடன்

 

User Comments
சி.ஆர்.சாரநாத்-- மது
பஞ்சல் சரித்ரு மஹாகவி அழகரார்யரின் அற்புதப் படைப்பு. இதைப் படித்தால் நாம்மால் மறக்கடிக்கப் பட்ட பல ஸௌராஷ்ட்ர சொற்களை இனம் கண்டறிந்து அதனைக் காத்து வழக்காற்றிலும் கொண்டு வரலாம்.
Information
Name
Comments
 
Verification Code
1 + 7 =