Sourashtra Time
NOW AVAILABLE IN READY STOCK. RUSH YOUR ORDER FOR hiinun caLisye, hitavun caLisye and cunuk caLisye for Rs. 250/- ONLY.
Advertisement
puthiya....Shreyangam

ஸ்ரேயங்க3ம்:
புதிய தலைமைக்கு சவால்!
மதுரை ஸெளராஷ்;ட்ர சபைத் தேர்தல் முடிந்தது. மீண்டும் பழைய நிர்வாகத்தினரே தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளது ஆச்சரியமான விஷயமே அல்ல. இது நிர்ணயிக்கப்பட்ட வெற்றி! எதிர்அணியினர் போஸ்டர்களை பெரிதுபெரிதாக போட்டு ஸெளராஷ்ட்ரர்கள் வாழும் அனைத்துப் பகுதியிலும் ஒட்டி விளம்பரப்படுத்தினார்கள். ஆனால் வெற்றிப் பெற்ற அணியோ எவ்வித சலனமுமின்றி இருந்தபோதே அவர்கள் வெற்றி நிர்ணயிக்கப்பட்ட வெற்றி என்பது உறுதியாக தெரிந்து கொள்ள முடிந்தது.
ஸெளராஷ்ட்ர சமூகத்தில் இருக்கும் பொது நிறுவனங்களில் தேர்தலை எதிர்கொள்ளும் விதம் எப்படிப்பட்டது என்பதை நன்கு உணர்ந்துள்ள குழு மீண்டும் வெற்றிப் பெற்றுள்ளது. இது ஒரு விஷயமே அல்ல. ஆனால் அவர்கள் முன் நாம் வைக்கும் கோரிக்கைகள் ஏற்புடையதாக இருந்தால் நிறைவேற்றக் கடமைப்பட்டவர்களாகி அனைவராலும் பாராட்டப்பட்டு முன்மாதிரியாக திகழவேண்டும்.
நமது கலாச்சாரம் பாதுகாக்கவும் மேம்படுத்தவும் பாடுபடவேண்டும். சமூக மக்கள் முன்னேற்றத்தில் தங்களுடைய சேவையை முன்மாதிரியாகக் காட்டவேண்டும். சபையில் அங்கத்தினராகும் கடுமையான முறையினை அறவே அகற்றப்படவேண்டும். பழைய விதிமுறைகளின்படி சமூக மக்கள் அனைவரையும் உறுப்பினராக்கும் முயற்சியில் ஈடுபடவேண்டும். ஆயுட்கால உறுப்பினர் தொகை வெகுவாக குறைக்கப்பட்டே ஆகவேண்டும். இது ஒன்றுதான் உங்களை ஜனநாயகத்திற்கு அழைத்துச் செல்லும். 
சபை சார்பில் பொதுவான விடுதி கட்டப்பட வேண்டும். வெளியூர் ஸெளராஷ்ட்ரர்கள் வியாபார நிமித்தமாகவும் சுற்றுலாவாக வரும்போதும் தங்குவதற்கு வசதியாக இந்த விடுதி அமையவேண்டும். குறைந்தக் கட்டணத்தி;ல் செயல்படுத்தும்போது நம் சமூக மக்களுக்கு பாதுகாப்புடன் கூடிய வசதிகள் நிறைந்து காணப்பட வேண்டும்.
சமூக கனதனவான்களின் உதவியுடன் கல்வி தொழில் வளத்திற்கு பாடபடவேண்டும். மேலும் பெரிய அளவில் திருமண மண்டபங்கள் கட்டவும் செய்யவேண்டும். சபை விதிமுறைகள்படி திருமணம் கல்வி ஆகியவற்றிற்கு நிதியுதவி செய்யப்படவேண்டும். 
நம் சபைக்குப் பாத்தியப்பட்ட ஸ்ரீபிரசன்ன வேங்கடேச பெருமாள் கோவிலில் உழவாரப்பணி மேற்கொள்ளவேண்டும். நம் கலாச்சாரப்படி அனைத்து திருவிழாக்களும் முறையே நடத்தப்பட வேண்டும். குறிப்பாக பசவண்ணா எனப்படும் பொ3ஸ்கண்ணொ கோலாட்டம் நடைபெற வேண்டும். 
சமூக சபைக்குப் பாத்தியப்பட்ட அசையும் அசையா சொத்துக்கள் பாதுகாப்பதோடு சீராக பராமரிக்கப்பட வேண்டும். இந்த புதிய நிர்வாக சபைக்கு சவாலாக இந்த பணிகள் காத்திருக்கிறது என்பதை மட்டும் புரிந்து கொண்டு செயல்பட்டால் சரி!

ஸ்ரேயங்க3ம்:

Vol.4 16th July 2017 Issue: 22

புதிய தலைமைக்கு சவால்!

மதுரை ஸெளராஷ்ட்ர சபைத் தேர்தல் முடிந்தது. மீண்டும் பழைய நிர்வாகத்தினரே தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது ஆச்சரியமான விஷயமே அல்ல. இது நிர்ணயிக்கப்பட்ட வெற்றி! எதிர்அணியினர் போஸ்டர்களை பெரிதுபெரிதாக போட்டு ஸெளராஷ்ட்ரர்கள் வாழும் அனைத்துப் பகுதியிலும் ஒட்டி விளம்பரப்படுத்தினார்கள். ஆனால் வெற்றிப் பெற்ற அணியோ எவ்வித சலனமுமின்றி இருந்தபோதே அவர்கள் வெற்றி நிர்ணயிக்கப்பட்ட வெற்றி என்பது உறுதியாக தெரிந்து கொள்ள முடிந்தது.

ஸெளராஷ்ட்ர சமூகத்தில் இருக்கும் பொது நிறுவனங்களில் தேர்தலை எதிர்கொள்ளும் விதம் எப்படிப்பட்டது என்பதை நன்கு உணர்ந்துள்ள குழு மீண்டும் வெற்றிப் பெற்றுள்ளது. இது ஒரு விஷயமே அல்ல. ஆனால் அவர்கள் முன் நாம் வைக்கும் கோரிக்கைகள் ஏற்புடையதாக இருந்தால் நிறைவேற்றக் கடமைப்பட்டவர்களாகி அனைவராலும் பாராட்டப்பட்டு முன்மாதிரியாக திகழவேண்டும்.

நமது கலாச்சாரம் பாதுகாக்கவும் மேம்படுத்தவும் பாடுபடவேண்டும். சமூக மக்கள் முன்னேற்றத்தில் தங்களுடைய சேவையை முன்மாதிரியாகக் காட்டவேண்டும். சபையில் அங்கத்தினராகும் கடுமையான முறையினை அறவே அகற்றப்படவேண்டும். பழைய விதிமுறைகளின்படி சமூக மக்கள் அனைவரையும் உறுப்பினராக்கும் முயற்சியில் ஈடுபடவேண்டும். ஆயுட்கால உறுப்பினர் தொகை வெகுவாக குறைக்கப்பட்டே ஆகவேண்டும். இது ஒன்றுதான் உங்களை ஜனநாயகத்திற்கு அழைத்துச் செல்லும். 

சபை சார்பில் பொதுவான விடுதி கட்டப்பட வேண்டும். வெளியூர் ஸெளராஷ்ட்ரர்கள் வியாபார நிமித்தமாகவும் சுற்றுலாவாக வரும்போதும் தங்குவதற்கு வசதியாக இந்த விடுதி அமையவேண்டும். குறைந்தக் கட்டணத்தில் செயல்படுத்தும்போது நம் சமூக மக்களுக்கு பாதுகாப்புடன் கூடிய வசதிகள் நிறைந்து காணப்பட வேண்டும்.

சமூக கனதனவான்களின் உதவியுடன் கல்வி தொழில் வளத்திற்கு பாடபடவேண்டும். மேலும் பெரிய அளவில் திருமண மண்டபங்கள் கட்டவும் செய்யவேண்டும். சபை விதிமுறைகள்படி திருமணம் கல்வி ஆகியவற்றிற்கு நிதியுதவி செய்யப்படவேண்டும். 

நம் சபைக்குப் பாத்தியப்பட்ட ஸ்ரீபிரசன்ன வேங்கடேச பெருமாள் கோவிலில் உழவாரப்பணி மேற்கொள்ளவேண்டும். நம் கலாச்சாரப்படி அனைத்து திருவிழாக்களும் முறையே நடத்தப்பட வேண்டும். குறிப்பாக பசவண்ணா எனப்படும் பொ3ஸ்கண்ணொ கோலாட்டம் நடைபெற வேண்டும். 

சமூக சபைக்குப் பாத்தியப்பட்ட அசையும் அசையா சொத்துக்கள் பாதுகாப்பதோடு சீராக பராமரிக்கப்பட வேண்டும். இந்த புதிய நிர்வாக சபைக்கு சவாலாக இந்த பணிகள் காத்திருக்கிறது என்பதை மட்டும் புரிந்து கொண்டு செயல்பட்டால் சரி!

User Comments
Information
Name
Comments
 
Verification Code
2 + 5 =