Sourashtra Time
NOW AVAILABLE IN READY STOCK. RUSH YOUR ORDER FOR hiinun caLisye, hitavun caLisye and cunuk caLisye for Rs. 250/- ONLY.
Advertisement
chalni-kaLatni 5-7

ஸெளராஷ்ட்ர மொழியில் ஒப்பியல் ஆய்வு!

திராவிட மொழியியல் துறை ஆண்டுதோறும் நாட்டின் பல பகுதிகளில் விசேஷக் கூட்டங்களை நடத்தி அதன் உறுப்பினர்களை அழைத்து மொழிகள் குறித்து ஆராய்ச்சி உரை மற்றும் தங்கள் கருத்துக்களை எழுதிப் படிக்க அனுமதிக்கின்றனர். நம் சமூகத்தின் சார்பில் சிலர் இதன் உறுப்பினர்களாக உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. மூத்த வழக்கறிஞர் மோகன்ராம்ää ஸெளராஷ்ட்ர மொழி எழுத்து இலக்கியப்பணியில் அதிக ஆர்வங்கொண்டு செயல்படும் ஓபுளா சுப்பிரமணியன் சமீபத்தில் பாரத ஸ்டேட் வங்கியில் பணியாற்றி ஓய்வுப் பெற்ற விடின். கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் இதன் உறுப்பினர்களாவார்கள். 
2011ல் பாட்டியாவிலுள்ள பஞ்சாப் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற 39வது திராவிட மொழியியலார் மகாநாட்டில் 600 அடிப்படைச் சொற்கள் ஸெளராஷ்ட்ர மொழியிலும் மராட்டி மொழியிலும் எவ்விதம் மாறுபடுகின்றன என்பதைக் குறித்து ஒரு கட்டுரையை ஓபுளா சுப்பிரமணியன் படித்துள்ளார். அவற்றில் 49 சதம் ஸெளராஷ்ட்ர சொற்கள் மராட்டி மொழியிலும் ஒத்துப் போகிறது என்று கூறியுள்ளார்.
இந்த ஆண்டு புது டில்லியில் பலகலைக்கழக மொழியியல் துறையில் கடந்த 24ää25 மற்றும் 26-6-2017 ஆகிய மூன்று நாட்களில் இந்த ஆராய்ச்சி மையத்தின் சார்பில் நடைபெற்ற 45வது திராவிட மொழியியல் மகாநாட்டின் சிறப்புக் கூட்டத்தில் ஓபுளா சுப்பிரமணியன் மற்றும் விடின்.கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் கலந்து கொண்டனர். 24ஆம் நாள் ஓபுளா சுப்பிரமணியன் ஸெளராஷ்ட்ர மற்றும் மராட்டி மொழிகளில் வாக்கிய அமைப்பு மாறுபடும் தன்மையை விளக்கி கட்டுரை ஒன்றை சமர்ப்பித்து படித்துள்ளார். 2011க்கு முன்பு வழக்கறிஞர் மோகன்ராம் வேங்கடசூரி இராமாயணம் பற்றி உரையாற்றியதும் குறிப்பிடத்தக்கது. 
இந்த ஆய்வு மையத்தின் மூலம் தென்னிந்தியாவில் வாழுகின்ற நம் சமூக மக்கள் குறித்தும் ஸெளராஷ்ட்ர மொழி குறித்தும் பல்வேறு மொழி ஆய்வாளர்கள் அறிந்து கொள்ள வழி வகுக்கும். 

திராவிட மொழியியல் துறை ஆண்டுதோறும் நாட்டின் பல பகுதிகளில் விசேஷக் கூட்டங்களை நடத்தி அதன் உறுப்பினர்களை அழைத்து மொழிகள் குறித்து ஆராய்ச்சி உரை மற்றும் தங்கள் கருத்துக்களை எழுதிப் படிக்க அனுமதிக்கின்றனர். நம் சமூகத்தின் சார்பில் சிலர் இதன் உறுப்பினர்களாக உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. மூத்த வழக்கறிஞர் மோகன்ராம், ஸெளராஷ்ட்ர மொழி எழுத்து இலக்கியப்பணியில் அதிக ஆர்வங்கொண்டு செயல்படும் ஓபுளா சுப்பிரமணியன் சமீபத்தில் பாரத ஸ்டேட் வங்கியில் பணியாற்றி ஓய்வுப் பெற்ற விடின். கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் இதன் உறுப்பினர்களாவார்கள். 


2011ல் பாட்டியாவிலுள்ள பஞ்சாப் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற 39வது திராவிட மொழியியலார் மகாநாட்டில் 600 அடிப்படைச் சொற்கள் ஸெளராஷ்ட்ர மொழியிலும் மராட்டி மொழியிலும் எவ்விதம் மாறுபடுகின்றன என்பதைக் குறித்து ஒரு கட்டுரையை ஓபுளா சுப்பிரமணியன் படித்துள்ளார். அவற்றில் 49 சதம் ஸெளராஷ்ட்ர சொற்கள் மராட்டி மொழியிலும் ஒத்துப் போகிறது என்று கூறியுள்ளார்.


இந்த ஆண்டு புது டில்லியில் பலகலைக்கழக மொழியியல் துறையில் கடந்த 24,25 மற்றும் 26-6-2017 ஆகிய மூன்று நாட்களில் இந்த ஆராய்ச்சி மையத்தின் சார்பில் நடைபெற்ற 45வது திராவிட மொழியியல் மகாநாட்டின் சிறப்புக் கூட்டத்தில் ஓபுளா சுப்பிரமணியன் மற்றும் விடின்.கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் கலந்து கொண்டனர். 24ஆம் நாள் ஓபுளா சுப்பிரமணியன் ஸெளராஷ்ட்ர மற்றும் மராட்டி மொழிகளில் வாக்கிய அமைப்பு மாறுபடும் தன்மையை விளக்கி கட்டுரை ஒன்றை சமர்ப்பித்து படித்துள்ளார். 2011க்கு முன்பு வழக்கறிஞர் மோகன்ராம் வேங்கடசூரி இராமாயணம் பற்றி உரையாற்றியதும் குறிப்பிடத்தக்கது. 


இந்த ஆய்வு மையத்தின் மூலம் தென்னிந்தியாவில் வாழுகின்ற நம் சமூக மக்கள் குறித்தும் ஸெளராஷ்ட்ர மொழி குறித்தும் பல்வேறு மொழி ஆய்வாளர்கள் அறிந்து கொள்ள வழி வகுக்கும். 

 

User Comments
Information
Name
Comments
 
Verification Code
3 + 5 =