Sourashtra Time
NOW AVAILABLE IN READY STOCK. RUSH YOUR ORDER FOR hiinun caLisye, hitavun caLisye and cunuk caLisye for Rs. 250/- ONLY.
Advertisement
Samooka Chinthanai-1

சமூகச் சிந்தனை: 1

 

சமூகச் சிந்தனை என்ற தலைப்பில் நம் சமூகத்தில் அன்றாடம் நடக்கும் பிரச்னைகள் மற்றும் கலாச்சாரம் என்ற பெயரில் நடைபெறும் முறையற்ற செயல்கள் தேவையற்ற பழக்கவழக்கங்கள் அதனால் ஏற்படும் பின்விளைவுகள் சமூகத்தில் களைய வேண்டிய - களை எடுக்க வேண்டிய பழக்கங்கள் இவற்றைப் பற்றி விரிவாக எழுதினால்…… சமுதாயத்தில் ஒரு பொருளாதார புரட்சியினை ஏற்படுத்தினால் எப்படி இருக்கும் என்று என் மனதில் லேசாக சிந்தனையை ஓடவிட்டேன். ஆஹா… பிறந்தால் ஸெளராஷ்ட்ர சமூகத்தில் பிறக்க வேண்டும் என்று பலரும் பெருமையாக பேசுவதுபோல மனக்கண்ணில் ஒரு காட்சி. ஏன் என் சமூகம் பிறருக்கு ஓர் உதாரணமாக இருக்கக் கூடாது. அப்படி ஓர் உதாரண சமுதாயமாக நம்மால் மாற்ற முடிந்தால் அதுவே எனது சமுதாயத்திற்கு நான் செய்யும் மகத்தான பணியாக கருதுகிறேன்.


இந்தக் கட்டுரையை எப்படி வடிவமைப்பது என்ற சிந்தித்தேன். ஒரு ஸெளராஷ்ட்ரன் பிறப்பு முதல் இறப்புவரை அவன் வாழுகின்ற வாழ்க்கை நெறியினை ஆய்வுசெய்து வாழுகின்றபோது சமுதாயத்தில் அவன் சந்திக்கும் பிரச்னைகள் - பழக்கவழக்கங்கள் - கலாச்சாரம் என்ற பெயரில் நடக்கும் கூத்து – பொருளாதார ரீதியில் ஒவ்வொரு ஸெளராஷ்ட்ரனும் எதிர்கொள்ளும் பாதிப்புகள் - அதனால் ஏற்படும் மனக்கசப்புகள் - ஒருவரையொருவர் குறை சொல்லி அதனால் ஒட்டுமொத்த சமூகத்தையே குறை காணும் கண்ணோட்டம் - ஆண் ஆதிக்கத்திலும் மற்றும் பெண் ஆதிக்கத்திலும் இருக்கும் குடும்பங்களிலுள்ள உறுப்பினர்களின் மனநிலை – கொள்கை பிடிப்பில்லாமல் வாழுவோரின் வாழ்க்கை முறை - இறப்பின்போது நடக்கும் மனிதத்தன்மையற்ற செயல்கள் - சொத்துக்களை பிரிக்கும் பாங்கு – மகள் மருமகள் தாய் மாமியார் அதே போல் மகன் மருமகன் தகப்பன் மாமனார் என்ற நிலையில் ஒரு பெண் மற்றும் ஒரு ஆண் நடந்து கொள்ளும் இயல்பு – விட்டுக்கொடுக்கும் குணமில்லாதவர்களால் ஏற்படும் விபரீதமான விளைவுகள் - சமாதானமாகும் மனப்பக்குவமற்றவர்களின் மனிதாபிமானமற்றச் செயல்கள் இப்படி ஏகமாக சொல்லிக் கொண்டே போவதை விட எழுத ஆரம்பித்து விட்டால் ஏராளமான விஷயங்கள் கிடைக்கலாம் என்று கருதி எழுத முற்படுகிறேன்.


இருந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும்

இவர்போல யாரென்று ஊர் சொல்ல வேண்டும்

ஒருவன் இறந்த பின்னும் இறவாமல் இருக்க வேண்டும். அதுதான் சிறந்த வாழ்க்கையாக இருக்கும் என்பதுதான் முன்னோர்கள் நமக்குக் காட்டியுள்ள வாழ்க்கை நெறி. இந்த சமுதாயத்தில் களைய வேண்டிய பழக்கங்களும் களையெடுக்க வேண்டிய சம்பிரதாயங்களும் ஏராளமாக உள்ளது. இவைகளை அறிந்து பண்படுத்தினாலே போதும் ஒரு பொருளாதார புரட்சியே ஏற்பட வாய்ப்புள்ளது என்பதை தொடர்ந்து படிப்போர்கள் புரிந்து கொள்வார்கள். 


அடுத்த இதழில் திருமண காலத்தில் ஆண் - பெண் - பெற்றோர் மனநிலை பற்றிக் காண்போம். -எஸ்.டி.ஞானேஸ்வரன்

 

User Comments
DR.T.G.KUPPUSAMY,DUBAIU.A.E.
AVRE BHASAM NANGETHO,KAVITHAI LIKKE BHAI,BENANUK PURASKAR THENO MENI SRIMAN NAYAGI MANDIR NIRVAGIN JOVAL MI ONTE LEKKU RUPAI DERIYO.AVRE BHASA HODATHOK ELLE KERIYO.ELLE PRIZE NAYAGI DEVUN JAYANTHI VIZHA VEL DENOMENI SETHE.BHAI,BEINEN LIKKIRIO SRIMAN NAYAGI MANDIRUK THADDUVO.NAMASKAR.
Information
Name
Comments
 
Verification Code
3 + 8 =