Sourashtra Time
NOW AVAILABLE IN READY STOCK. RUSH YOUR ORDER FOR hiinun caLisye, hitavun caLisye and cunuk caLisye for Rs. 250/- ONLY.
Advertisement
puratchikku...Shreyangam

ஸ்ரேயங்க3ம்:
புரட்சிக்குத் தயாராகுங்கள்! 
தமிழ்நாட்டில் வாழுகின்ற அனைத்து ஊர் ஸெளராஷ்ட்ரர்களிடையே ஒரு ஒற்றுமையுண்டு. அதுதான் ஸெளராஷ்ட்ர சபை. ஓவ்வொரு ஊரிலும் ஒரு சபை உண்டு. இவைகளையெல்லாம் ஒருங்கிணைத்து மத்ய சபை என்ற ஓர் அமைப்பு பின்னாளில் உருவானது. இந்த தலையங்கத்;தில் சொல்லவருவது என்னவென்றால் நம் ஸெளராஷ்ட்ரர்களுக்கு கல்வி தொழில் பொருளாதாரம் மற்றும் அரசியல் ஆகியவற்றில் முன்னேற்றம் காண ஓர் அமைப்பு அப்போது தேவைப்பட்டது. 
மதுரையி;ல் முதன்முதலில் ஸெளராஷ்ட்ர சபை உருவாக்கப்பட்டது. இராமியா கே.ஆர்.ராமாச்சாரி பெரும் சிரத்தையுடன் உருவாக்கிய மதுரை ஸெளராஷ்ட்ர சபைக்கு தலைமைப் பொறுப்பேற்றார். இந்த அமைப்பின் அவசியத்தை உணர்ந்து அவரவர் ஊர்களில் சமூக நலன் கருதி சபைகள் உருவாக்கப்பட்டது. அனைத்து ஊர்களிலும் ஸெளராஷ்ட்ர சபை உருவாக மதுரை ஸெளராஷ்ட்ர சபை முன்னுதாரணம் என்றால் அது மிகையாகாது. ஏன் இதை தாய்ச்சபை என்றும் கூறலாம்.
மதுரை ஸெளராஷ்ட்ர சபை பாரம்பரியம் மிக்க சபை. வெட த4வ்ரொ என்று நாம் அழைக்கும் ஸ்ரீபிரசன்ன வெங்கடேஸ்வர தேவஸ்தானம் இச்சபைக்குப் பாத்தியப்பட்டது. ஸெளராஷ்ட்ர ஆரம்ப பாடசாலைää ஹைஸ்கூல் உருவானது இங்கிருந்துதான் என்பது குறிப்பிடத்தக்கது. பின்னர் நிர்வாக நலன்கருதி தனியாக ஹைஸ்கூல் கவுன்சில் உருவாக்கி பொறுப்புகள் ஒப்படைக்கப்பட்டது. கோவில் நிர்வாகத்திற்கு தனியாக டிரஸ்டி என்று ஒருவரை நியமித்து அவர் கீழ் சில உறுப்பினர்களையும் தேர்வு செய்யும் பழக்கம் உருவாக்கப்பட்டது. சபை நிர்வாகம் சமூகப்பணிகளில் மும்முரமாக ஈடுபட இந்த ஏற்பாடுகள் செய்யப்பட்டது என்பதை சபை வரலாறு கூறுகிறது.
ஆனால் இன்று மதுரை ஸெளராஷ்ட்ர சபையின் நிலை எப்படி இருக்கிறது? கோவி;ல் திருவிழா பூஜை கோவில் சொத்துக்களை பராமரிப்பது போன்ற இவைகளை மட்டுமே கவனித்துக் கொள்ள தனது முழுக்கவனமும் செலவிடுகிறது. சமூகத்திற்கான எந்த பணியிலும் ஈடுபடுவதாக தெரியவி;ல்லை. தேர்தல் சமயத்தில் கூட தம்மை முன்னிலைப் படுத்திக் கொள்ள முன்வரவில்லை. ஆங்காங்கே உள்ள சிறுசிறு அமைப்புகள் கல்விக்கான உதவிகளை செய்து வருகிறது. முதியோர்க்கு உதவிää ஏழைகளுக்கு விழாக்காலத்தில் புத்தாடைகள் வழங்குவதுää தொழில் புரிவோர்க்குத் தேவையான வழிகாட்டுதல் வழங்குவது என்று எந்த பணியிலும் மதுரை ஸெளராஷ்ட்ர சபை ஈடுபடுவதாக இல்லை. சபையின் விதியின்படி சபை நிர்வாகம் நடந்து கொள்ளவில்லை என்பது வெட்டவெளிச்சமாகத் தெரிகிறது. 
ஆனால் தேர்தல் சமயங்களில் மட்டுமே தங்களுக்குத் தேவையான உறுப்பினர்களை சேர்த்து மீண்டும் அவர்களே பதவியில் அமரும் பரிதாபகரமான நிலையில் இன்றைய சபை மாறிவிட்டது. ஒரு குடும்பத்தைச் சார்ந்த சகோதரர்கள் சபைää ஹைஸ்கூல்ää கல்லூரி என்று பரவலாக வியாப்பித்து மற்ற யாரையும் அண்டவிடாமல் சர்வாதிகாரப் போக்கில் நடந்துவரும் கேவலமான அரசியல்பாணிதான் நடந்துவருகிறது. 
இதற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்க முடியாமல் பலர் ஏங்கி தவிக்கின்றனர். சமீபத்தில் ஹைஸ்கூல் கவுன்சில் தேர்தலுக்கு முன்னர் நடந்த போராட்டமும் பயனற்று போய்விட்டது. சுமார் 40 ஆண்டுகளுக்கு முன்னர் ஒரு குடும்பத்தினரே எல்லா அமைப்புகளிலும் தலைமை ஏற்று வழி நடத்திக் கொண்டிருந்தது. பின்னர் இன்னொரு தொழில் துறையை முன்னிலைப் படுத்தி தலைமை ஏற்று வழி நடத்தியது. இப்போது அவர்கள் வழியில் வந்த இன்னொரு குடும்பம் சமூகத்தின் இதயமாக விளங்கும் அனைத்திலும் வியாப்பித்துள்ளது. இதன் தாக்கம் பொருளாதார ரீதியாக பல தவறுகள் உருவாகக் காரணமாகிறது. 
இந்த நிலை என்று மாறுமோ? சமூக மக்களே சிந்தியுங்கள். சமூக பொதுச்சொத்துக்கு பங்கம் ஏற்பட்டுக் கொண்டிருக்கிறது என்று மட்டும் தெளிவாகிறது. உண்மை நிலை அறிந்து ஒரு புரட்சிக்குத் தயாராகுங்கள்! 

ஸ்ரேயங்க3ம்:

Vol.4 1st September  2016 Issue: 1

புரட்சிக்குத் தயாராகுங்கள்! 

தமிழ்நாட்டில் வாழுகின்ற அனைத்து ஊர் ஸெளராஷ்ட்ரர்களிடையே ஒரு ஒற்றுமையுண்டு. அதுதான் ஸெளராஷ்ட்ர சபை. ஓவ்வொரு ஊரிலும் ஒரு சபை உண்டு. இவைகளையெல்லாம் ஒருங்கிணைத்து மத்ய சபை என்ற ஓர் அமைப்பு பின்னாளில் உருவானது. இந்த தலையங்கத்தில் சொல்லவருவது என்னவென்றால் நம் ஸெளராஷ்ட்ரர்களுக்கு கல்வி தொழில் பொருளாதாரம் மற்றும் அரசியல் ஆகியவற்றில் முன்னேற்றம் காண ஓர் அமைப்பு அப்போது தேவைப்பட்டது. 

மதுரையில் முதன்முதலில் ஸெளராஷ்ட்ர சபை உருவாக்கப்பட்டது. இராமியா கே.ஆர்.ராமாச்சாரி பெரும் சிரத்தையுடன் உருவாக்கிய மதுரை ஸெளராஷ்ட்ர சபைக்கு தலைமைப் பொறுப்பேற்றார். இந்த அமைப்பின் அவசியத்தை உணர்ந்து அவரவர் ஊர்களில் சமூக நலன் கருதி சபைகள் உருவாக்கப்பட்டது. அனைத்து ஊர்களிலும் ஸெளராஷ்ட்ர சபை உருவாக மதுரை ஸெளராஷ்ட்ர சபை முன்னுதாரணம் என்றால் அது மிகையாகாது. ஏன் இதை தாய்ச்சபை என்றும் கூறலாம்.

மதுரை ஸெளராஷ்ட்ர சபை பாரம்பரியம் மிக்க சபை. வெட த4வ்ரொ என்று நாம் அழைக்கும் ஸ்ரீபிரசன்ன வெங்கடேஸ்வர தேவஸ்தானம் இச்சபைக்குப் பாத்தியப்பட்டது. ஸெளராஷ்ட்ர ஆரம்ப பாடசாலைää ஹைஸ்கூல் உருவானது இங்கிருந்துதான் என்பது குறிப்பிடத்தக்கது. பின்னர் நிர்வாக நலன்கருதி தனியாக ஹைஸ்கூல் கவுன்சில் உருவாக்கி பொறுப்புகள் ஒப்படைக்கப்பட்டது. கோவில் நிர்வாகத்திற்கு தனியாக டிரஸ்டி என்று ஒருவரை நியமித்து அவர் கீழ் சில உறுப்பினர்களையும் தேர்வு செய்யும் பழக்கம் உருவாக்கப்பட்டது. சபை நிர்வாகம் சமூகப்பணிகளில் மும்முரமாக ஈடுபட இந்த ஏற்பாடுகள் செய்யப்பட்டது என்பதை சபை வரலாறு கூறுகிறது.

ஆனால் இன்று மதுரை ஸெளராஷ்ட்ர சபையின் நிலை எப்படி இருக்கிறது? கோவில் திருவிழா பூஜை கோவில் சொத்துக்களை பராமரிப்பது போன்ற இவைகளை மட்டுமே கவனித்துக் கொள்ள தனது முழுக்கவனமும் செலவிடுகிறது. சமூகத்திற்கான எந்த பணியிலும் ஈடுபடுவதாக தெரியவில்லை. தேர்தல் சமயத்தில் கூட தம்மை முன்னிலைப் படுத்திக் கொள்ள முன்வரவில்லை. ஆங்காங்கே உள்ள சிறுசிறு அமைப்புகள் கல்விக்கான உதவிகளை செய்து வருகிறது. முதியோர்க்கு உதவி, ஏழைகளுக்கு விழாக்காலத்தில் புத்தாடைகள் வழங்குவது, தொழில் புரிவோர்க்குத் தேவையான வழிகாட்டுதல் வழங்குவது என்று எந்த பணியிலும் மதுரை ஸெளராஷ்ட்ர சபை ஈடுபடுவதாக இல்லை. சபையின் விதியின்படி சபை நிர்வாகம் நடந்து கொள்ளவில்லை என்பது வெட்டவெளிச்சமாகத் தெரிகிறது. 

ஆனால் தேர்தல் சமயங்களில் மட்டுமே தங்களுக்குத் தேவையான உறுப்பினர்களை சேர்த்து மீண்டும் அவர்களே பதவியில் அமரும் பரிதாபகரமான நிலையில் இன்றைய சபை மாறிவிட்டது. ஒரு குடும்பத்தைச் சார்ந்த சகோதரர்கள் சபை, ஹைஸ்கூல், கல்லூரி என்று பரவலாக வியாப்பித்து மற்ற யாரையும் அண்டவிடாமல் சர்வாதிகாரப் போக்கில் நடந்துவரும் கேவலமான அரசியல்பாணிதான் நடந்துவருகிறது. 

இதற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்க முடியாமல் பலர் ஏங்கி தவிக்கின்றனர். சமீபத்தில் ஹைஸ்கூல் கவுன்சில் தேர்தலுக்கு முன்னர் நடந்த போராட்டமும் பயனற்று போய்விட்டது. சுமார் 40 ஆண்டுகளுக்கு முன்னர் ஒரு குடும்பத்தினரே எல்லா அமைப்புகளிலும் தலைமை ஏற்று வழி நடத்திக் கொண்டிருந்தது. பின்னர் இன்னொரு தொழில் துறையை முன்னிலைப் படுத்தி தலைமை ஏற்று வழி நடத்தியது. இப்போது அவர்கள் வழியில் வந்த இன்னொரு குடும்பம் சமூகத்தின் இதயமாக விளங்கும் அனைத்திலும் வியாப்பித்துள்ளது. இதன் தாக்கம் பொருளாதார ரீதியாக பல தவறுகள் உருவாகக் காரணமாகிறது. 

இந்த நிலை என்று மாறுமோ? சமூக மக்களே சிந்தியுங்கள். சமூக பொதுச்சொத்துக்கு பங்கம் ஏற்பட்டுக் கொண்டிருக்கிறது என்று மட்டும் தெளிவாகிறது. உண்மை நிலை அறிந்து ஒரு புரட்சிக்குத் தயாராகுங்கள்! 

User Comments
Information
Name
Comments
 
Verification Code
1 + 6 =