Sourashtra Time
NOW AVAILABLE IN READY STOCK. RUSH YOUR ORDER FOR hiinun caLisye, hitavun caLisye and cunuk caLisye for Rs. 250/- ONLY.
Advertisement
chalni-kaLatni 31-07

 

ஸ்ரீமத் கவி வேங்கடசூரி சுவாமிகள் ஸ்ரீமந் நடனகோபால நாயகி சுவாமிகள் அருளிச்செய்த ஸெளராஷ்ட்ர மொழிக் கீர்த்தனைகள் மதுரை வி.கே.நீலாராவ் அவர்களால் ஸ்வரப் படுத்தப்பட்டு ஸ்வரக் குறிப்புடன் நூல் வெளியீட்டுவிழா 30-07-2017 அன்று காலை மதுரை ஸெளராஷ்ட்ர சிலம்ப ரூ தேகப்பபயிற்சி சாலை திருமண மண்டபத்தில் நடைப்பெற்றது. 
நூலாசிரியரின் பேத்திகளான செல்வி பிரியங்காஸ்ரீ மற்றும் கௌரிஸ்ரீ ஆகியோரின் இறைவணக்கத்துடன் விழா தொடங்கியது. இவ்விழாவிற்கு பேராசிரியரும் ஜோதிடருமான முனைவர் எம்.வி.சுப்புராமன் தலைமை வகித்தார். நூலாசிரியர் வி.கே.நீலாராவ் வரவேற்புரை நிகழ்த்தினார். தஞ்சை ஸ்ரீமத் வேங்கடரமண பாகவத சுவாமிகள் சபைத் தலைவர் எம்.எஸ்.ராமலிங்கம் முன்னிலை வகித்து தாம் அரசியலில் இருந்தாலும் நானும் ஒரு ஸெளராஷ்ட்ரன் என்ற உணர்வினாலும் சமூகத்திற்கு உரியவன் என்பதைக் காட்டவே இவ்விழாவில் கலந்து கொண்டுள்ளேன் என்று பெருமையாக தமது உரையில் குறிப்பிட்டார். 
பத்மஸ்ரீ கலைமாமணி மரு. சீர்காழி. ஜி. சிவசிதம்பரம் எம்.டி. நூலை வெளியிட்டு நீலாராவ் செய்த செயற்கரிய இப்பணியை பாராட்டி பேசினார். பத்மஸ்ரீ கலைமாமணி டி.எம்.சௌந்தரராஜன் அவர்களின் முதன்மை மாணவர்ää பேராசிரியர் மகாதேவன் முதல் பிரதியைப் பெற்றுக் கொண்டு நீலாராவ் வெற்றிக் கொடியை நாட்டியவர் என்று தமது உரையில் சிறப்பாகக் குறிப்பிட்டார். 
மேலும் இந்நிகழ்ச்சியில் ஸெளராஷ்ட்ர டைம் ஆசிரியர் ஞானேஸ்வரன்ää திருமதி. முனைவர் சாந்தசங்கரி சுப்பிரமணியன் ஆகியோர் சிறப்புரையாற்றினார்கள். புல்லாங்குழல் வித்வான் மனோகரன் நீலராவ் ஸ்வரப்படுத்திய கீர்த்தனைகளை குழலில் வாசித்தார். அனைவரும் வெகுவாக ரசித்த இவ்விழா இறதியாக விச்சு பதிப்பகத்தின் சார்பில் காசிவிஸ்வநாதன் நன்றி கூறினார். 
மதிய உணவினை எல்லோரும் சேர்ந்து உண்டு முடித்து வந்தபோது ஸெளராஷ்ட்ரர்களின் விருந்து சாப்பாடு தனக்கு மிகவும் பிடிக்கும் என்று குறிப்பிட்டது மனதிற்கு நிறைவினைக் கொடுத்தது. மரு. சீர்காழி. ஜி. சிவசிதம்பரம் நம் சமூக மக்களுடன் ஒன்றி புன்னகைத் தவழும் இன்முகத்துடன் நீலாராவின் சிஷ்யைகள் பாட அருகிலமர்ந்து கேட்டதை ரசிக்க முடிந்தது. எவ்வித பகட்டுமின்றி அனைவரோடும் அவர் சகஜமாக பழகிய தன்மை வியப்பில் ஆழ்த்தியது. இவ்விழாவிற்கு அவரை அழைத்து பெருமைப் படுத்திய நீலாராவ்  பாராட்டுக்குரியவர். 

ஸ்ரீமத் கவி வேங்கடசூரி சுவாமிகள் ஸ்ரீமந் நடனகோபால நாயகி சுவாமிகள் அருளிச்செய்த ஸெளராஷ்ட்ர மொழிக் கீர்த்தனைகள் மதுரை வி.கே.நீலாராவ் அவர்களால் ஸ்வரப் படுத்தப்பட்டு ஸ்வரக் குறிப்புடன் நூல் வெளியீட்டுவிழா 30-07-2017 அன்று காலை மதுரை ஸெளராஷ்ட்ர சிலம்ப & தேகப்பபயிற்சி சாலை திருமண மண்டபத்தில் நடைப்பெற்றது. 

 

நூலாசிரியரின் பேத்திகளான செல்வி பிரியங்காஸ்ரீ மற்றும் கௌரிஸ்ரீ ஆகியோரின் இறைவணக்கத்துடன் விழா தொடங்கியது. இவ்விழாவிற்கு பேராசிரியரும் ஜோதிடருமான முனைவர் எம்.வி.சுப்புராமன் தலைமை வகித்தார். நூலாசிரியர் வி.கே.நீலாராவ் வரவேற்புரை நிகழ்த்தினார். தஞ்சை ஸ்ரீமத் வேங்கடரமண பாகவத சுவாமிகள் சபைத் தலைவர் எம்.எஸ்.ராமலிங்கம் முன்னிலை வகித்து தாம் அரசியலில் இருந்தாலும் நானும் ஒரு ஸெளராஷ்ட்ரன் என்ற உணர்வினாலும் சமூகத்திற்கு உரியவன் என்பதைக் காட்டவே இவ்விழாவில் கலந்து கொண்டுள்ளேன் என்று பெருமையாக தமது உரையில் குறிப்பிட்டார். 

பத்மஸ்ரீ கலைமாமணி மரு. சீர்காழி. ஜி. சிவசிதம்பரம் எம்.டி. நூலை வெளியிட்டு நீலாராவ் செய்த செயற்கரிய இப்பணியை பாராட்டி பேசினார். பத்மஸ்ரீ கலைமாமணி டி.எம்.சௌந்தரராஜன் அவர்களின் முதன்மை மாணவர், பேராசிரியர் மகாதேவன் முதல் பிரதியைப் பெற்றுக் கொண்டு நீலாராவ் வெற்றிக் கொடியை நாட்டியவர் என்று தமது உரையில் சிறப்பாகக் குறிப்பிட்டார். 

மேலும் இந்நிகழ்ச்சியில் ஸெளராஷ்ட்ர டைம் ஆசிரியர் ஞானேஸ்வரன், திருமதி. முனைவர் சாந்தசங்கரி சுப்பிரமணியன் ஆகியோர் சிறப்புரையாற்றினார்கள். புல்லாங்குழல் வித்வான் மனோகரன் நீலாராவ் ஸ்வரப்படுத்திய கீர்த்தனைகளை குழலில் வாசித்தார். அனைவரும் வெகுவாக ரசித்த இவ்விழா இறுதியாக விச்சு பதிப்பகத்தின் சார்பில் காசிவிஸ்வநாதன் நன்றி கூறினார். 

மதிய உணவினை எல்லோரும் சேர்ந்து உண்டு முடித்து வந்தபோது ஸெளராஷ்ட்ரர்களின் விருந்து சாப்பாடு தனக்கு மிகவும் பிடிக்கும் என்று குறிப்பிட்டது மனதிற்கு நிறைவினைக் கொடுத்தது. மரு. சீர்காழி. ஜி. சிவசிதம்பரம் நம் சமூக மக்களுடன் ஒன்றி புன்னகைத் தவழும் இன்முகத்துடன் நீலாராவின் சிஷ்யைகள் பாட அருகிலமர்ந்து கேட்டதை ரசிக்க முடிந்தது. எவ்வித பகட்டுமின்றி அனைவரோடும் அவர் சகஜமாக பழகிய தன்மை வியப்பில் ஆழ்த்தியது. இவ்விழாவிற்கு அவரை அழைத்து பெருமைப் படுத்திய நீலாராவ் பாராட்டுக்குரியவர்.  -புகைப்படம்: சந்திரசேகர், சித்ரா ஸ்டூடியோ, மதுரை

 

User Comments
Information
Name
Comments
 
Verification Code
2 + 9 =