Sourashtra Time
NOW AVAILABLE IN READY STOCK. RUSH YOUR ORDER FOR hiinun caLisye, hitavun caLisye and cunuk caLisye for Rs. 250/- ONLY.
Advertisement
thErthal ...1

ஸெளராஷ்ட்ர மத்ய சபை நடத்திய அகில இந்திய ஸெளராஷ்ட்ர பிரதிநிதிகள் மகாநாட்டில் நாம் முன்னிலை படுத்தி கேட்ட கோரிக்கை 5 சீட். ஆனால் நமக்கு கிடைத்திருப்பதோ தமிழகத்தின் மாநிலக் கட்சிகளால் ஒரு இடமும் தேசிய கட்சியால் இரண்டு இடமும் கிடைத்துள்ளது. ஒரு இடம் கொடுத்துள்ள மாநிலக் கட்சிகள் ஸெளராஷ்ட்ரர்களுக்கே முன்னுரிமைக் கொடுத்துள்ளது பாராட்ட வேண்டியதே. இதனை மகாநாட்டிற்கு கிடைத்தப் பரிசாகக் கொள்ளலாம். இந்த பரிசை எப்படி நாம் தக்க வைத்துக் கொள்ளப்போகிறோம். 
பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் ஏ.ஆர். மகாலட்சுமியும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் எம். பாலச்சந்திரன் மற்றும் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில் எஸ்.எஸ்.சரவணன் ஆகிய மூவர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் மூவரில் யார் வெற்றிப் பெற்றாலும் அவர்கள் கட்சிக்கு ஒரு சட்டமன்ற உறுப்பினர் என்பது உண்மை. ஆனால் நம் சமூகத்திற்கோ ஒட்டு மொத்த தமிழ்நாடு ஸெளராஷ்ட்ரர்களின் பிரதிநிதியாகத் தான் சட்டமன்ற உறுப்பினர் என்பது மறுக்க முடியாத உண்மை. அவருக்கும் அந்த உணர்வுதான் இருக்கவேண்டும் என்பது எதிர்பார்ப்பு. 
இந்த சட்டமன்ற உறுப்பினர் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து ஊர் ஸெளராஷ்ட்ரர்களின் செல்லப்பிள்ளையாகி விடுவார். கௌரவம் மரியாதை என்று ஏகமாக அனைவரும் அழைத்து கொண்டாடப் படுவார். இந்த சட்டமன்ற உறுப்பினர் ஸெளராஷ்ட்ரர்களின் பிரச்னைகளை சட்டமன்றத்தில் துணிவுடன் பேசுகின்ற ஆற்றல் படைத்தவராக இருக்கவேண்டும். கட்சியின் கட்டுப்பாட்டிற்குள் தன்னை அடக்கிக்கொண்டு எதுவும் பேச இயலாதவராகி விடக்கூடாது என்பதே எங்கள் விருப்பம். எனவே சுதந்திரமாக பேசும் வல்லமையும் சமூகத்திற்காக குரல் கொடுக்கும் ஆற்றலும் படைத்த ஒருவர்தான் இன்றைய சூழ்நிலையில் நமக்குத் தேவை.
நீங்கள் வாக்களிக்கும் வேட்பாளர் இந்த தகுதிகளோடு இ:ருக்கிறாரா என்பதை சிந்தித்து உங்கள் வாக்குகளை வீணடிக்காமல் பொறுப்புடன் செயல்படுங்கள். ஏனென்றால் உங்களால் சட்டமன்றம் செல்பவர் வீணாக போய்வருபவராகி விடக்கூடாது. 

அன்புள்ள தம்பிக்கு…..

உனதன்பு சகோதரன்   
சூரியா ஞானேஸ்வர்.

User Comments
Information
Name
Comments
 
Verification Code
4 + 8 =