Sourashtra Time
NOW AVAILABLE IN READY STOCK. RUSH YOUR ORDER FOR hiinun caLisye, hitavun caLisye and cunuk caLisye for Rs. 250/- ONLY.
Advertisement
viLambarangaLai ... ShrEyangam

ஸ்ரேயங்க3ம்:


Vol. 7                                    1st September 2019                                   Issue: 01


 
விளம்பரங்களை திறந்துப் பாருங்கள்!


1984ஆம் ஆண்டில் பல்சுவை குடும்ப மாத இதழாக ஸெளராஷ்ட்ர டைம் தொடங்கப்பட்டது. அதிவிரைவில் ஸெளராஷ்ட்ர மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. சிறப்பான முறையில் தலையங்கம், ஊர் சபைத் தலைவர்கள் மத்ய சபைத் தலைவர்கள் மற்றும் ஒவ்வொரு துறையில் சிறந்து விளங்கிய சமூகப் பிரமுகர்கள் பற்றிய சுவையானச் செய்திகள் அவர்களுடைய சேவைகள் குறித்து பேட்டி கட்டுரைகள், ஸெளராஷ்ட்ர எழுத்தாளர்களை ஊக்குவிக்கும் முகமாக அவர்களுடைய சிறுகதைகள், கட்டுரைகள், கவிதைகள், நகைச்சுவைகள், துணுக்குகள் என்று ஏகமாக தாங்கி வெளிவந்தது ஸெளராஷ்ட்ர டைம். அத்துடன் ஸெளராஷ்ட்ர மொழி வளர்ச்சியில் ஆர்வமுள்ள அனைவருடைய கருத்துக்களை ஏற்று மொழி இலக்கியம் எழுத்து வளர்ச்சிக் குறித்தும் அக்கறையுடன் செயல்பட்டு வந்தது ஸெளராஷ்ட்ர டைம். அதிக பிரதிகள் விற்பனையாகும் ஒரே பத்திரிகை என்ற பெயரை தக்கவைத்துக் கொள்ள முடியாமல் பொருளாதார ரீதியாக மிகுந்த சிரமங்களை சந்தித்தது ஸெளராஷ்ட்ர டைம்.


தற்சமயம் கடந்த 6 ஆண்டுகளாக உலகம் முழவதும் வாழும் ஸெளராஷ்ட்ரர்கள் அனைவரும் ஸெளராஷ்ட்ர டைம் படிக்க வேண்டும் என்ற ஆர்வத்தில் எவ்வித பொருளுதவியும் எதிர்பாராமல் சிறப்பான முறையில் இணைய தளத்தில் உலா வருவதும் ஸெளராஷ்ட்ர டைம் மட்டுமே. வளர்ந்து வரும் கணினி தொழில் நுட்பம் நம் ஸெளராஷ்ட்ரர்களுக்கு பெரிதும் உதவியாக உள்ளது என்றால் அது மிகையாகாது. இ-பத்திரிகையாக ஸெளராஷ்ட்ர டைம் வெளிவருவது மட்டுமின்றி ஸெளராஷ்ட்ர மொழி எழுத்துக்களுடன் கட்டுரை கவிதைகள் என்று பலருடைய படைப்புகளும் தற்சமயம் இணையத்தில் வெளிவந்துக் கொண்டிருக்கிறது. ஸெளராஷ்ட்ர மொழி இலக்கிய வளர்ச்சி இணைய தளம் வழியாக வெகுவாக உலகமெங்கும் பரவிக் கொண்டிருக்கிறது.


இந்த இதழ் 7ஆம் ஆண்டின் முதன் இதழ். இந்த ஆண்டு முதல் ஸெளராஷ்ட்ரீயை பயில விரும்புவோர் ஆசையை பூர்த்தி செய்யும் வகையில் விரைவில் ஸெளராஷ்ட்ர மொழி வகுப்புகள் ஒளிக்காட்சியாக வெளிவர உள்ளது என்பதை தெரிவித்துக் கொள்கிறோம். நமது வாசகர்களிடமிருந்து நாம் எதிர்பார்ப்பது ஒன்றே. ஸெளர்hஷ்ட்ர டைம் இ-பத்திரிகையை தொடர்ந்து படியுங்கள். சமீப காலமாக இதில் கூகுள் விளம்பரங்கள் இடம் பெறுகின்றது என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன். வெளிவரும் விளம்பரங்களை நன்கு கவனித்து திற்ந்து பாருங்கள். திறந்து பார்ப்பதால் தொடர்ந்து இதழை நடத்தும் நிர்வாகச் செலவிற்கு உதவியது போலாகும் என்பதைக் கூறிக்கொண்டு தவறாமல் ஸெளராஷ்ட்ர மொழியைக் கற்றுக் கொள்வதுடன் இலக்கியங்களைப் படித்தும் இன்புறுங்கள் என்று கேட்டுக் கொள்கிறேறாம். வாழ்க ஸெளராஷ்ட்ரீ!

User Comments
Information
Name
Comments
 
Verification Code
2 + 8 =