Sourashtra Time
NOW AVAILABLE IN READY STOCK. RUSH YOUR ORDER FOR hiinun caLisye, hitavun caLisye and cunuk caLisye for Rs. 250/- ONLY.
Advertisement
mathyasabai....Shreyangam

ஸ்ரேயங்க3ம்:


Vol.4 16th June 2017 Issue: 20


 

மத்யசபைத் தலைவர் செய்வாரா?

 

ஊர் சபைகளில் பிரச்னை என்றால் மத்ய சபை தலையிட்டு தீர்த்து வைக்கிறது. எல்லா ஊர் ஸெளராஷ்ட்ரர்களும் இதனை வரவேற்கிறார்கள். ஆனால் மதுரையிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு மத்ய சபையின் தலைவரான ஈஸ்வரமூர்த்தி மதுரை சபை விஷயமாக என்ன செய்து விட்டார் என்ற கேள்வி எழுந்துள்ளது. அவர் முன்னே மகத்தானப் பணி காத்திருக்கிறது. மதுரையில் ஒரு குடும்பம் அனைத்து நிர்வாகத்திலும் ஆக்கிரமித்துள்ளதை களையெடுக்க வேண்டும். ஸெளராஷ்ட்ர மேனிலைப் பள்ளி முதல் பல கல்வி நிறுவனங்கள் மதுரை ஸெளராஷ்ட்ர சபை என்று ஏகமாக ஆக்கிரமித்திருக்கிறார்கள். அத்துடன் அந்த நிர்வாகத்தில் வெளியாட்கள் யாரும் நுழைந்துவிடக் கூடாது என்பதற்காக உறுப்பினர் தொகையை உயர்த்தி இருக்கிறார்கள். சாமான்யர்கள் யாரும் எளிதில் ஆர்வத்துடன் சபையில் உறுப்பினராக சேர்ந்து விடக்கூடாது என்பதற்காகவே இந்த கட்டண உயர்வு. பழைய உறுப்பினர்கள் எவ்வித முன்னறிவிப்புமின்றி நீக்கப்பட்டுள்ளார்கள் என்பது வருத்தமான செய்தி!


மதுரை ஸெளராஷ்ட்ர சபைக்குத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. ஸெளராஷ்ட்ரர்கள் வாழுகின்ற பகுதிகளை இருபது வார்டுகளில் அடக்கி வார்டுக்கு பத்து கௌன்சிலர்கள் வீதம் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்கள். இவர்களை தவிர மகிமை மூலம் கணிசமான அளவில் கௌன்சிலர்களை சேர்த்து போர்டார் ஆப் டைரக்டர்கள் தேர்தலில் வாக்களிக்கும் உரிமையினை வழங்கியிருக்கிறார்கள். தேர்ந்தெடுக்கப்;பட்ட கௌன்சிலர்கள் மகிமை கௌன்சிலர்கள் என்று அனைவராலும் தலைவர் உபதலைவர் காரியதரிசி பொக்கிஷதார் மற்றும் நிர்வாக இயக்குனர்கள் தேர்ந்தெடுக்கப்படவுள்ளார்கள். இதுவும் போட்டியின்றி ஏகமனதாக ஆகிவிட்டால் அடுத்த ஐந்து ஆண்டிற்கு மீண்டும் குடும்ப நிர்வாகம் தான் தலைதூக்கும். இதற்கெல்லாம் ஒரு முற்றுப்புள்ளி வைக்கும் முகமாக ஸெளராஷ்ட்ர மத்ய சபைத் தலைவர் தலையிட்டு ஒரு புதிய நிர்வாகம் அமைய வழிவகை செய்ய வேண்டும். பழைய நிர்வாகிகள் அனைவரும் நண்பர்களாக இருந்தாலும் சமூக நன்மைக் கருதி மத்ய சபைத் தலைவர் மதுரை ஸெளராஷ்ட்ர சபைக்கு புதிய நிர்வாகம் அமைய முன்னின்று செயல்பட வேண்டும்.

 

மத்ய சபைத்தலைவர் ஈஸ்வரமூர்த்தி செய்வாரா?

 

User Comments
Information
Name
Comments
 
Verification Code
4 + 6 =