Sourashtra Time
NOW AVAILABLE IN READY STOCK. RUSH YOUR ORDER FOR hiinun caLisye, hitavun caLisye and cunuk caLisye for Rs. 250/- ONLY.
Advertisement
gOpura ....shrEyangam

ஸ்ரேயங்க3ம்:


Vol.3 1st July 2016 Issue: 21


 

கோபுர விளக்கு!

தேர்தல் முடிந்த பின்பு ஸெளராஷ்ட்ர மத்ய சபையினர்க்கு சின்னதாக ஓய்வு. அதன் பின்னர் பெயர் சொல்லும் அளவிற்கு சிறப்பாக ஒரு பணியாற்ற வேண்டும் என்ற அவசியத்திற்கு ஆளாகியது. ஆம் நாமக்கல் ஸெளராஷ்ட்ர சபை பிரச்னை பெரிதாக வளர்ந்து சமூக பொது மக்களும் ஆர்வலர்களும் மத்ய சபை தலையிட்டால்தான் சுமுகமான முறையில் தீர்வுக் காண முடியும் என்ற நம்பினார்கள். அதன்படியே செயல்பாடுகள் முடுக்கிவிடப்பட்டது. 

 

மத்ய சபைத்தலைவர் கோவையில் நாமக்கல் சபையினரை அழைத்து முதல் கட்டமாக பேச்சு வார்த்தை நடத்தினார். நல்லதோர் முன்னேற்றம் காணமுடிந்தது. காரணம் மத்ய சபை நிர்வாகிகளின் சொல்லுக்கு மதிப்பளித்து அவர்கள் கருத்துக்களை ஏற்று நடப்பதாக உறுதியளித்தப் பின் தேர்தல் நடத்துவதற்கான பூர்வாங்கப் பணிகளை முடுக்கிவிட்டு இரண்டு தரப்பினரும் தேர்தலில் பங்குக் கொண்டு பதவிகளில் இருந்து செயல்படவேண்டும் என்ற கருத்திற்கு மாற்று இல்லாமல் போனதே ஒரு நல்ல உதாரணமாக அமைந்தது.

 

அதன் பின் சிற்சில கருத்து வேறுபாடுகள் தோன்றியது. ஸெளராஷ்ட்ர மத்ய சபை நிர்வாகிகள் மற்றும் முன்னாள் நிர்வாகிகள் ஸெளராஷ்ட்ர சமூக பொதுச்சொத்து பாதுகாப்புக் குழுவினர் என அனைவரும் ஆர்வத்துடன் நாமக்கல் சென்று பிரச்னைகளை அலசி ஆய்ந்து தீர்க்கமாக சிந்தித்து அனைத்துத்தரப்பினரையும் அழைத்துப்பேசி சுமுகமான முடிவுகள் எடுக்கப்பட்ட பின்னர் புதிய நிர்வாகிகளை தேர்வு செய்து அனைவரையும் மகிழ்வித்தது உண்மையில் பாராட்டுக்குரிய விஷயம். இந்த விஷயத்தில் மத்ய சபைத்தலைவரின் அணுகுமுறை அனைவரையும் அரவணைத்துச் செல்லும் பாங்கு நிச்சயமாக சமூக ஒற்றுமைக்கு நல்லதோர் விடியல் என்றே கூறலாம். ஒரு ஊரின் பெரிய பிரச்னையை எளிதாக கையாண்டு சுமுகமாக தீர்த்துவைத்த விதமும் அவ்வூர் மக்கள் அதனை ஏற்றுக்கொண்ட பாங்கும் மனதை நெகிழச் செய்கிறது.

 

ஸெளராஷ்ட்ர மத்ய சபையின் தேவையையும் அவசியத்தையும் அனைத்து ஊர் ஸெளராஷ்ட்ர மக்கள் உணரத் தொடங்கிவிட்டனர் என்று சொன்னால் அது மிகையாகாது. ஸெளராஷ்ட்ர மத்ய சபை கோபுர விளக்காகத் திகழ வேண்டும் என்பதே எங்களின் எதிர்பார்ப்பு!

 

User Comments
Information
Name
Comments
 
Verification Code
4 + 6 =