Sourashtra Time
NOW AVAILABLE IN READY STOCK. RUSH YOUR ORDER FOR hiinun caLisye, hitavun caLisye and cunuk caLisye for Rs. 250/- ONLY.
Advertisement
nErmaikku....Shreyangam

ஸ்ரேயங்க3ம்:


  Vol.4 16th March  2017 Issue: 14


 

நேர்மைக்கு ஒரு சரவணன்!

ஆட்ட நாயகன் என்றும் ஆங்கிலத்தில் Man of the Match என்றும் கிரிக்கெட் விளையாட்டில் சிறப்பாக ஆடுபவரை புகழ்ந்து தள்ளுவார்கள். அது போல இன்றைய தினம் நம் தமிழக அரசியல் விளையாட்டு அரங்கில் சிறப்பான சட்டமன்ற உறுப்பினராக பெருமைப் படுத்தி பாராட்டுக்குரியவராக அனைவர் நெஞ்சில் இடம் பிடித்தவர். துணிச்சல்காரர். நேர்மைக்கும் தர்மச் சிந்தனைக்கும் பெயர்போன ஸெளராஷ்ட்ர இனத்தில் பிறந்தவர். தனது தொகுதி மக்களுக்காக பாடுபடுபவர். அவர்களின் உண்மை பிரதிநிதி. ஆம்! தனக்கு வாக்களித்த மக்கள் யார் ஆளவேண்டும் என்று எண்ணி வாக்களித்தனரோ அந்த எண்ணத்திற்கு துரோகம் செய்யாமல் கூவாத்தூரில் நடந்த கூச்சலிலிருந்து தப்பித்து வந்தவர். அவர்கள் பக்கம் சாய்ந்திருந்தால் கோடிக்கணக்கில் சம்பாதித்திருக்க முடியும். பணத்தை ஒரு பொருட்டாக மதிக்காததாலும் காலஞ்சென்ற தலைவிக்கும் அவரை வஞ்சித்த கும்பலுக்கும் என்றுமே உடனிருக்க விரும்பாமலும் தப்பி வந்தவர். அவரே மதுரை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் எஸ்.எஸ். சரவணன். அவர்அரசியலில் பல உயர்வுகள் பெற்று சிறக்கவும் நம் சமூகத்திற்கு சிறப்பான முறையில் பணியாற்றிடவும் அவரது செயல்பாட்டிற்கு உற்சாகமூட்டும் வகையில் அவரை பாராட்டி சிறப்பு செய்கிறோம். தமிழக சட்டமன்ற வரலாற்றிலே உதாரணத்திற்குப் பேச ஒரு உறுப்பினர் என்றால் அது சரவணன்தான்!

 

தமிழக அரசியலில் அதிமுக வரலாற்றிலே நிலைத்த பெயரை பெறுபவர் தெற்கு சட்டமன்ற உறுப்பினர் சரவணன் என்றால் அது மிகையாகாது. மதுரையில் தெற்குத் தொகுதி வாக்காளர்கள் சார்பில் அவருக்கு மாபெரும் பாராட்டுவிழா நடந்தது. அது அவரது மன உறுதிக்கு கிடைத்த பரிசு. நெஞ்சில் உரமின்றி நேர்மை திறனின்றி வஞ்சனை சொல்வாரடி! அவர் வாய்ச்சொல் வீரரடி என்ற பாரதியின் பாடல்வரிகள் வஞ்சித்த கும்பலுக்கு ஏற்றவை! பல மாறுதல்கள் திருப்பங்கள் என்று தமிழக அரசியலில் நாம் எதிர்க்;கொள்ள வேண்டிய சூழலில் இருக்கின்றோம். அவைகளை அடுத்த சில நாட்களில் காணத்தான் போகிறோம். நம்மை ஆள்பவர் யாராக இருக்கலாம் என்ற போராட்டத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கும் நாட்கள் நெருங்கி வருகிறது. பொறுத்திருந்து பார்ப்போம்!

 

User Comments
Information
Name
Comments
 
Verification Code
3 + 8 =