Sourashtra Time
NOW AVAILABLE IN READY STOCK. RUSH YOUR ORDER FOR hiinun caLisye, hitavun caLisye and cunuk caLisye for Rs. 250/- ONLY.
Advertisement
Samooka Chinthanai-3

சமூகச் சிந்தனை: 3
திருமணக் காலங்களில் ஆண்-பெண் மற்றும் பெற்றோர் மனநிலை எப்படி இருக்கும் என்பதை விரிவாக இல்லாது போனாலும் ஓரளவாவது காண முற்பட்டேன். ஆண்-பெண் மனநிலைப் பற்றி ஏற்கனவே இரண்டு தொடர்களில் எழுதினேன். இப்போது பெற்றோர்களின் மனநிலைப் பற்றி எழுத வேண்டும் என்றபோதுதான் பெரும் பிரச்னையாக உள்ளது. பெற்றோர்களின் மனநிலை என்பது ஒவ்வொரு ஆண்-பெண் வாழ்க்கைக்கு மாற்று சக்தியாக உள்ளது என்பதை சென்ற இதழில் சொல்லியிருந்தேன். அதனை ஆய்வு செய்யும்போதுதான் தெரிந்தது ஒவ்வொரு பெற்றோர்களின் மனநிலையும் காலச்சூழ்நிலைக்கு ஏற்றவாறு மாறுகிறது என்றும் அந்த மாற்று சக்திகூட சுற்றியுள்ள உறவினர்களால்தான் வருகிறது என்றும் மனோதத்துவ ரீதியில் எழுத முற்பட்டால் பக்கம் பக்கமாக எழுதலாம். அந்த அளவில் விஷயங்கள் கிடைக்கிறது. எனினும் படிப்பவர்களுக்கு உற்சாகமும் நாம் கொஞ்சமாவது மாறிதான் பார்ப்போமே என்ற எண்ணமும் வரவேண்டும் என்பதற்காக மட்டுமே இக்கட்டுரை எழுத முற்பட்டுள்ளேன். எனவே ஒரு சில உதாரணங்களுடன் பெற்றோர் மனநிலையை முடித்துக் கொண்டு எல்லாவற்றுக்கும் மாற்று என்ன? தீர்வு எப்படி காண்பது? போன்ற கருத்துக்களையும் எழுதவேண்டும். அதற்காக நம் சமூக மக்கள் வாழுகின்ற அனைத்து ஊர்களிலும் உள்ள வழக்கங்களை ஆராய முற்படுகிறேன்.
இரண்டு தலைமுறைக்கு முன்பு அண்ணன் தங்கை இருவருக்கும் ஒரே செலவில் திருமணம் நடத்தியதுண்டு. அப்போதைய மனநிலையில் அண்ணனுக்கு வரும் சீர்வரிசைகள் தங்கையின் சீர்வரிசையாக திருப்பிவிடப்பட்டது. அண்ணனுக்கு சம்பந்தம் பேசிய பெண் வீட்டார்களிடம் அதிகமான சீர்கள் பெறப்பட்டு அதில் பெரும்பான்மை தங்கைக்கு சம்பந்தம் பேசிய ஆண் வீட்டார்க்கு வழங்கும் வழக்கம் மிகுதியாகக் காணப்பட்டது. இதற்காக மனசாட்சியில்லாமல் கேட்டு வாங்கும் பழக்கம் பெற்றோர் மனதில் வெகுவாக பாதித்திருந்தது. அதன் வெளிப்பாடு சம்பந்திகளுக்குள் பிரச்னைகள் சண்டைகள் உருவாகும். அதனால் மாமியார்-மருமகள் சண்டை என்று இப்படியே போய் இரு குடும்பங்களுக்கிடையே ஒருவித ஏற்றத்தாழ்வு காணும் மனநிலை உருவாகி மனக்கஷ்டம் ஏற்பட்டு புதுமணத் தம்பதியர்களுக்குள் ஒருவித மனக்கசப்பு உண்டாகி அவர்கள் வாழ்வில் காணவேண்டிய சந்தோஷமும் பறிபோய்விடுகிறது. அத்தோடு மட்டுமின்றி அடுத்து திருமண வயதில் பெண்ணோ ஆணோ இருந்தால் அவர்கள் திருமணமும் காலதாமதம் எற்பட்டு பெற்றோர்கள் மனஅழுத்தம் காரணமாக நோய்வாய்படவும் வாய்ப்புக்கள் ஏற்படுகிறது. 
இதனால் தற்சமயம் ஒரு நேரத்தில் ஒரு திருமணமே செய்ய வேண்டும் என்றும் இரண்டு திருமணங்கள் செய்தால் ஒரு தம்பதியரின் வாழ்க்கை பாதிக்கப்படுகிறது என்றும் சென்டிமெண்டாக பேசி இந்த வழக்கம் மாறி வருகிறது. 
ஆணைப் பெற்றவர்கள் பெண் வீட்டாரிடம் நடந்து கொள்ளும் விதம் பின்னர் அவர்கள் தங்கள் பெண்ணை சம்பந்தம் பேசும்போது காட்டும் வெளிப்பாடு இரண்டும் மாறிமாறி இரவுபகல் போல தொடர்ந்தாலும் பொருளாதார ரீதியாக பாதிக்கப்படுவது ஒட்டு மொத்த சமுதாயம்தான். பக்கத்து வீட்டு அம்மா சொன்னாங்க என்றும் அத்தை நாத்தனார் என்று உறவினர்கள் ஏதாவது சொல்லப் போக தங்களது நிலையிலிருந்து தாழ்ந்து பெண் வீட்டாரிடம் பேரம் பேசும் பெற்றோர்கள் ஏதோ ஒரு மகத்தான சாதனை செய்துவிட்டது போல எண்ணிக் கொள்ளும் மனநிலையே ஓங்கி நிற்கிறது. இதனால் வீட்டிற்கு வரும் மணமகள் தான் பிறந்த வீட்டிலிருந்து அதிகமாக கொண்டு வந்துள்ளதாகவும் தன்னை யாரும் ஏளனமாக பேசக்கூடாது என்ற மிதப்பில் தன்னுடைய நிலையை தேவையில்லாமல் உயர்த்திக் கொள்வதன் மூலம் அங்கே நாத்தனார் மாமியார் என்று பலரிடம் சண்டைகள் சிறுசிறு பிணக்குகள் என்று மனநிம்மதியை இழக்கும் அளவிற்கு சூழ்நிலை உருவாக்கப்படுகிறது. 
இவையெல்லாம் தவறான நடத்தைகள் என்று ஒருவருக்கொருவர் உணர்ந்து தங்களை சீர்படுத்திக் கொள்ள முற்படும்போது நடந்த கசப்பான அனுபவம் அடுத்துவரும் சந்ததிக்குத் தரக்கூடாது என்று எண்ணுகின்றனர். அப்படியும் மாறாத சில பெற்றோர்கள் இருக்கிறார்கள். அவர்கள் மனதில் உருவெடுக்கும் பிடிவாத குணமே பற்பல பிரச்னைகளுக்கு வித்திடுகிறது. 
ஓவ்வொரு பெற்றோர்களின் மனநிலை ஒவ்வொரு விதமாக உள்ளது. பொதுவாகக் கூற இயலாது போனாலும் பிரச்னைகளை வைத்து பார்க்கும்போது அதனால் ஏற்படும் மனக்கஷ்டமும் பணக்கஷ்டமும் ஒரே மாதிரியானவையே. உதாரணத்திற்கு ஒரு சிலரது மனநிலைகளை வைத்து இந்த தொடரை தொடர்கிறேன். மீண்டும் அடுத்த இதழில் சந்திக்கிறேன்.

User Comments
Information
Name
Comments
 
Verification Code
1 + 8 =