Sourashtra Time
NOW AVAILABLE IN READY STOCK. RUSH YOUR ORDER FOR hiinun caLisye, hitavun caLisye and cunuk caLisye for Rs. 250/- ONLY.
Advertisement
chalni-kaLatni 10-16

ஸெளராஷ்ட்ர கவிஞர்கள் பங்கேற்று கவி பாடிய நிகழ்ச்சி மதுரை காமராசர் சாலையில் உள்ள சோலை ஸ்ரீமுருகன் கல்யாண மண்டபத்தில் ஸெளராஷ்ட்ர ஸாஹித்ய ஸதஸ் நிர்வாகிகளால் சென்ற 1-10-2016 அன்று மாலை நடைபெற்றது.

ஏஸ் ஸிங்கா3ர் என்ற தலைப்பில் கவிஞர்கள் கசின் ஆனந்தம், விஸ்வநாதன்,   அப்பன்ராஜ், ஜுட்டு தியாகராசன், புலவர் பரசுராம் மற்றும் பேராசிரியர்கள் தாமோதரன், கோவர்தனன் தங்கள் கவிதைகளை வாசித்தனர். ஸதஸின் முத்தாய்ப்பாக ஆண்டாள் அருளிய வாரணமாயிரம் என்னும் பாசுரம் ஸெளராஷ்ட்ர மொழியில் ஜுட்டு தியாகராசன் மொழிப்பெயர்ப்பாக “ஹைஸ்துந் ஸஸர்” என்ற சிறு நூல் வெளியிடப்பட்டது. இந்நூல் மதுரை கீழப்பெருமாள் மேஸ்திரி வீதியிலுள்ள யுவராஜன் டெக்ஸ்டைல் நிறுவனத்தில் இலவசமாகப் பெற்றுக்கொள்ளலாம்.


 

நம் சமூக மக்கள் ஆயிரக்கணக்கில் கூடும் மகாநாடு போன்ற விழாக்களில் வேளை தவறாமல் உணவு வழங்கும் முழுப்பொறுப்பினை ஏற்று அன்னதான பிரபு என்ற தமிழக ஸெளராஷ்ட்ர மக்களால் பாராட்டப்பெற்ற பெங்களுரைச் சேர்ந்த தொழிலதிபர் ஸ்ரீஹரிலால் கோடே உடல்நலத்தால் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்குப் பலனின்றி சென்ற 31-10-2016 அன்று காலமானார் என்பதை குசோ செயலாளர் ஜெயபால் மூலமாக அறிந்தோம். 


கோடே கர்நாடகவில் உள்ள அனைத்து அரசியல் தலைவர்களுடனும் நண்பர்களாக பழகியவர். கிட்டத்தட்ட நாற்பது வருடகாலமாக நடைபெற்றுவரும் இவரது குழுமத்தில் சுமார் 45 தொழில் நிறுவனங்கள் உள்ளது. இவருக்கு மனைவியும் மூன்று ஆண் இரண்டு பெண் குழந்தை உள்ளிட்ட இவரது குடும்பத்தார்க்கு நம் சமூக மக்கள் சார்பில் இவருடைய மறைவுக் குறித்து அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கிறோம்.


கோடே நல்ல உள்ளம் படைத்த தர்ம சிந்தனையாளர். ஸெளராஷ்ட்ர மொழியின்பால் மிகவும் ஆர்வம் கொண்டவர். தமிழக ஸெளராஷ்ட்ர மக்களின் இலக்கிய நூல் வெளியீட்டிற்கும் ஆன்மீகத்திற்கும் தாராளமாக நன்கொடை வழங்கிய வள்ளல். ஆவரை இழந்துவாடும் அவரது குடும்பத்தார்க்கு ஸெளராஷ்ட்ர டைம் சார்பில் ஆழந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறோம்.


தமிழ்நாட்டில் அரவக்குறிச்சி, தஞ்சை, திருப்பரங்குன்றம் ஆகிய தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் வருகின்ற 19ஆம் தேதி நடைபெற உள்ளது. இதில் திருப்பரங்குன்றம் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் ஸெளராஷ்ட்ரர்கள் பெருவாரியாக இருந்தாலும் வேட்பாளர்கள் ஸெளராஷ்ட்ர சமூகத்தவர் யாருமில்லை. ஸெளராஷ்ட்ரர்களின் ஆதரவு வேண்டி யாரும் யாரிடமும் தொடர்பு கொள்ளவில்லை. எந்த வேட்பாளரும் ஸெளராஷ்ட்ர பத்திரிகைகளிடமும் ஆதரவுக் கேட்டு வரவில்லை.

தஞ்சை தொகுதியில் ஸெளராஷ்ட்ர மத்ய சபையின் முன்னாள் காரியதரிசியும் சமூகநலனில் அக்கறைக் கொண்டவரும் ஆன்மீகத்தில் பற்றுதல் கொண்ட அனைவரிடத்திலும் பழகுவதில் எளிமையானவரும் பாரதிய ஜனதா கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினரும் தஞ்சை ஸெளராஷ்ட்ரர்கள் நெஞ்சில் நிறைந்தவருமான எம்.எஸ். ராமலிங்கம் போட்டியிடுகிறார். இதனால் சட்டமன்றத்தில் நம்முடைய சமூகத்தின் பிரதிநிதித்துவம் அதிகமாக வாய்ப்புள்ளது என்பதை மனதில் கொண்டு தஞ்சைவாழ் ஸெளராஷ்ட்ரர்கள் ஒன்றுபட்டு அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றிப் பெறச் செய்யும்படி ஸெளராஷ்ட்ரடைம் சார்பில் கேட்டுக் கொள்கிறோம். 

இடைத்தேர்தல் நடைபெற்றால் ஆளுகின்ற கட்சிதான் வெற்றிப் பெறவேண்டும் என்ற சாதாரணப் போக்கை மாற்றி நம் சமூக வெற்றிக்கு ஒரு முன்னுதாரணமாக தஞ்சை உருவாக வேண்டும். எதிர்ப்பார்க்கலாமா?


 


 


 

User Comments
குட்டின் K Y சிவகுமா
I like the way all the messages are presented
Information
Name
Comments
 
Verification Code
3 + 9 =