Sourashtra Time
NOW AVAILABLE IN READY STOCK. RUSH YOUR ORDER FOR hiinun caLisye, hitavun caLisye and cunuk caLisye for Rs. 250/- ONLY.
Advertisement
chalni-kaLatni 7-12

காலமானார்

பிரபல நகைச்சுவை நடிகர், சிறந்த அரசியல் விமர்சகர், துக்ளக் இதழின் ஆசிரியர் இன்று அதிகாலையில் மாரடைப்பால் காலமானார்.


அவர் ஒரு எழுத்தாளர் அரசியல் விமர்சகர் பத்திரிகையாளர் என்ற பார்வையில் மக்கள் மத்தியில் பிரபலமானவர். நகைச்சுவை நடிகரான இவரது வசனங்கள் சிரிப்பையும் சமுதாயச்சிந்தனையையும் வளர்க்கும் விதத்தில் அமைந்திருக்கும்.


ஒவ்வொரு பத்திரியாளனுக்கும் ஒரு முன்மாதிரி யாராவது இருப்பார்கள். அவ்வகையில் எனக்கு முன்மாதிரி எழுத்தாளர் சோ ராமசாமி ஆவார்.


ஒருமுறை அவருடைய அலுவலகத்திற்குச் சென்று ஓவியர் உமாபதியை சந்திக்கச் சென்றேன். அப்போது அவர் வரவேற்பறையில் உட்கார்ந்திருந்தார். நான் ஒரு ஸெளராஷ்ட்ர பத்திரிகையாளன். ஓவியர் உமாபதியை சந்திக்க வந்துள்ளேன் என்று கூறியவுடன் உட்காரச் சொல்லி சமூகப் பத்திரிகை என்றாலும் எழுத்தில் உயிரோட்டம் இருக்கவேண்டும். தவறுகளைச் சுட்டிக்காட்டி துணிவுடன் எழுதவேண்டும் என்று கூறினார். இந்த இரண்டு வார்த்தைகள் அப்போது எனக்கு டானிக் சாப்பிட்டது போலிருந்தது. ஓவியர் உமாபதி வந்தவுடன் சோ எனக்கு அறிவுரை கூறியதாக கூறினேன். நான் அதிர்ஷ்டசாலி என்று அவர் குறிப்பிட்டார்.


ஸெளராஷ்ட்ர டைம் இதழில் நம் சமூகப் பிரச்னைகளை எழுதும்போது யாராக இருந்தாலும் தவறினைச் சுட்டிக் காட்டி எழுதும் தைரியத்தைப் பாராட்டி எமது வாசகர்களே துக்ளக் ஆசிரியரை போல எழுதுகிறீர்கள் என்றும் ஸெளராஷ்ட்ர சடையர்(Satire) என்றும் கூறுவதுண்டு. மலையோடு ஒப்பிட்டுப் பேசும்போது குறுகிப்போவேன். ஆனால் சோவின் துணிச்சலான எழுத்துக்கள் என்னுள் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியதுண்டு. அதன் பிரதிபலிப்பே என்னுடைய தலையங்கம், சமூகத் தலைவர்களைப் பற்றிய பேட்டிகள், சமுதாயச் சிந்தனையைத் தூண்டும் கட்டுரைகள்.


நம்நாடு ஒரு சிறந்த பத்திரிகையாளனை இழந்துள்ளது. அரசியல் நிகழ்வுகள் பற்றிய செய்திகளை முதலில் இவர் என்ன சொல்கிறார் என்ற எதிர்ப்பார்ப்பு அனைத்து தரப்பினரிடையே இருக்கும். அத்தகைய அரசியல் விமர்சகரை நாம் இழந்துள்ளோம்.


ஈடு செய்ய இயலாத அவரது இழப்பால் வாடும் குடும்பத்தார்க்கு ஸெளராஷ்ட்ர டைம் சார்பில் தனது இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறது.                                     -ஆசிரியர்    

User Comments
Information
Name
Comments
 
Verification Code
3 + 5 =