Sourashtra Time
NOW AVAILABLE IN READY STOCK. RUSH YOUR ORDER FOR hiinun caLisye, hitavun caLisye and cunuk caLisye for Rs. 250/- ONLY.
Advertisement
gOthru charithru...14

கோ3த்ரு சரித்ரு கே4ரு நாவுந்

தொகுத்தளிப்பவர்

சூர்யாஞானேஸ்வர்

18.பார்கவ மகரிஷி

பிருகு வம்சத்தை சேர்ந்த பார்கவ மகரிஷியிடம் கல்வி பயில கிருதவீரியன் என்ற அரசன் தனது சிறுபிராயத்தில் வந்தான். வளர்ந்து இளைஞனான பின் அரசு பொறுப்பினை ஏற்றபின் தனது குரு பார்கவ மகரிஷிக்கு நிறைய பொருட்செல்வங்களை வழங்கினான். இதனால் பிருகு வம்சத்தை சேர்ந்த பார்கவர் பெரும் செல்வந்தரானார். 

கிருத வீரியனி;ன் காலத்திற்குப் பிறகு அவனுடைய சத்திரிய வம்சத்தினர் பார்கவரிடம் விரோதம் கொண்டனர். இதனால் அஞ்சிய பார்கவர் தனது செல்வங்கள் அனைத்தையும் குழித்தோண்டி புதைத்தார். இருந்தாலும் சத்திரியர்கள் பார்கவரின் செல்வங்களை எல்லாம் எடுத்துக் கொண்டு அவரை விரட்டி விட்டனர். 

அனைத்து செல்வங்களையும் இழந்த நிலையில் பார்கவர் காட்டிற்குச் சென்று தவம் புரிந்து தவசீலரானார். இவரது ஆஸ்ரமத்தின் சிஷ்ய-பிறசிஷ்யைகளின் வழித்தோன்றல்களே பார்கவ கோத்திரத்தவர்கள் ஆவர். 

பார்கவ கோத்திரத்தின் ஸ்லோகம்:

ருத்ரஸ்ச தேவோ ந்ருகணம்ச நாரி

ரக்தேக தாரா ஸ{நகஸ்ச யோநி

ரக்ளெஞ்ஸ்ச பக்ஷீ பதரீச வ்ருகேஷா

ப்ருகுஸ{ந் காஸ்யப காதிஸ{நோ

 

பார்கவ கோ3த்ரம்:

 

வேத்3 : யஜுர் வேத்3

ஸ{த்ரு : ஆபஸ்தம்ப ஸ{த்ரு

நட்சத்ரு : ஆருத்ரா

கோ3த்ரு : பார்கவ கோத்ரம்

தே3ஸ் : ஸெளராஷ்ட்ரம்

கா3ம் : ஸோமநாதபுரி

தே3வதொ : ருத்ரன் 

க3ணம் : மனுஷ்ய க3ணம்

வாஹநொ : ஸ{நொ (நாய்)

பட்சி : சக்ரவாக் (சக்கரவாகப் பறவை)

விருட்சம் : போ3ரு ஜா2ட் (இலந்தை மரம்)

வாந் : டோளாவான்

ஆரிஷம் : பஞ்சாரிஷம்

பிரவரம் : பார்கவ, ஸ்யவன, அப்னுவான, ஒளர்வ மற்றும் ஜமதக்னி    ஆகிய கோத்திரங்கள் பஞ்சாரிஷ ப்ரவரம்.


பார்கவ மகரிஷிக் செரெ கே4ருநாவுந்:

1. கி3ரி

2. அட3டா3பனி

3. நாமாஞ்சி

4. பொல்லா

5. ஜெ2டின்

6. ராம்டா

7. கஸ்தூரியான்

8. தெக்கென்

9. தில்லா

10. பொலுவா

11. பிடு3கு

12. புரோகிதம்

13. சென்னின்

14. மொரடுன்

15. பொலுகுவான்


பொல்லா, பொலுவா, பொலுகுவான் இந்த மூன்று வீட்டுப்பெயர்களும் ஒரே பெயராக இருக்குமோ என்ற சந்தேகம் உள்ளது. இந்த வீட்டுப்பெயர்கள் சேலம் அம்மாப்பேட்டை பரமத்தி போன்ற பகுதிகளில் உள்ளது. இது தவிர வேறு விடுப்பட்ட வீட்டுப்பெயர்கள் இருந்தால் தெரியப்படுத்தி இப்பணியினை முழுமையடைய செய்யவேண்டுகிறேன். 

 

User Comments
Information
Name
Comments
 
Verification Code
4 + 9 =