Sourashtra Time
NOW AVAILABLE IN READY STOCK. RUSH YOUR ORDER FOR hiinun caLisye, hitavun caLisye and cunuk caLisye for Rs. 250/- ONLY.
Advertisement
Hedde Jomai-Cinema review

 

ஹெட்3;டெ3 ஜொமை – விமர்சனம்
பல்வேறு துறைகளில் கால் பதித்து முத்திரை பதித்தவர்கள் ஸெளராஷ்ட்ரர்கள். சினிமா துறையையும் விட்டு வைக்கவில்லை. அந்த காலத்திலேயே ராயல் டாக்கீஸ் முருகன் டாக்கீஸ் என படக்கம்பெனிகளை உருவாக்கி பல வெற்றிப்படங்களை தயாரித்;து இன்றளவும் பேசப்படும் முன்னணி நட்சத்திரங்களை உருவாக்கியவர்கள் ஸெளராஷ்ட்ரர்கள். அந்த வரிசையில் கணினி தொழில் நுட்பம் வளர்ந்துவிட்ட இந்த காலக்கட்டத்தில் ஞருடீநு னுபைவையட  முறையில் ஸெளராஷ்ட்ர மொழியில் திரைப்படம் எடுத்து திரைப்பட தணிக்கைக் குழுவின் சான்றிதழையும் பெற்று முந்தைய சாதனையாளர்களின் வரிசையில் நிமிர்ந்து நிற்கிறார் நீலாராவ் உலகின் முதல் ஸெளராஷ்ட்ர திரைப்படம் என்ற பெருமிதத்துடன்!
முழுக்க முழுக்க ஸெளராஷ்ட்ர மொழியிலேயே தமிழ் கலப்பில்லாமல் பேசி நடிக்க வைத்துள்ளார் இந்த படத்தி;ல். திரைக்கதை சமுதாய பின்னணி கொண்டுள்ளது. கதாநாயகன் ஒரு பணக்கார வீட்டுப்பையன். எதார்த்தமான சுபாவம் கொண்டவன். தாய்வீட்டுப் பெருமை பேசும் அகங்காரமும் ஆணவமும் கொண்ட மனைவிக்கும் அவளோடு பொறுமையுடன் வாழ்ந்து வரும் கணவனுக்கும் பிறந்தவள்தான் கதாநாயகி. இருவருக்கும் திருமணம் நடைபெறுகிறது. இடையே பல நகைச்சுவை காட்சிகள். அதில் ஏற்படும் அவமானம். தனது கணவனுக்கு கல்வியறிவு புகுட்டி தொழிலதிபராக்கி ஸெளராஷ்ட்ர சமூகத்தில் ஒரு பிரமுகர் என்றளவில் உயர்த்திக் காட்டுகிறார் இதுதான் கதையம்சம்.
கதை ஏற்கனவே நாடகமாக அரங்கேறி சமூக மக்களால் ஏகோபித்த பாராட்தலைப் பெற்றது. அதை திரைப்படமாக்கி சாதனை புரிந்துள்ளார். கதாநாயகனாக நடிக்கும் வெங்கடேஷ் பாத்திரமறிந்து நன்றாக செய்துள்ளார். அகங்காரம் பிடித்த மாமியாராக வரும் உஷாவுக்கு ஒரு சபாஷ்! பொறுமையான கணவனாக வரும் சந்திரசேகர் இயல்பாக தனது நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார். மற்றபடி சரோஜாää கே.எஸ். சந்திரசேகரன்ää தர்மியா குமரேஷ் மற்றும் பலர் நடித்துள்ளனர். கதாநாயகி ஜெர்ஸா ஒரு மலையாளப் பெண். ஸெளராஷ்ட்ர மொழியை புரிந்து கொண்டு செய்துள்ளார். பாடல்கள் உள்ளன. ஆனால் ரசிகர்களை முணுமுணுக்க வைக்கவில்லை. அதில் கொஞ்சம் கவனம் செலுத்தியிருக்கலாம்.
ஒளிப்பதிவு குமரன்ää ஒலிப்பதிவு ஸ்கை மீடியா பாலன்ää பாடல்களுக்கு இசையமைத்த ராஜ்பாஸ்கர் தத்தம் துறையில் உணர்ந்து செயல்பட்டுள்ளனர். படத்தொகுப்பு பிரபாகரன் படத்தை உட்கார வைத்து பார்க்கச் செய்கிறார். ஆங்கிலத்தில் சப் டைட்டில் போடப்படுவதால் அரசு தொலைக்காட்சியிலும் தனியார் தொலைக்காட்சியிலும் ஒளிப்பரப்பும் வாய்ப்பு நன்றாக உள்ளது.
திரையிடப்பட்ட திரையரங்குகளில் அரங்குநிறைந்த காட்சிகளாக நம் சமூக மக்கள் சென்று காணவேண்டும். அடுத்தடுத்து நிறைய ஸெளராஷ்ட்ர மொழி திரைப்படங்கள் நவீன தொழில் நுட்பத்துடன் வரவேண்டும். அதற்கு ஹெட்3டெ3 ஜொமை ஒரு முன் மாதிரியாக இருக்கட்டும். –ஆசிரியர்.

ஹெட்3டெ3 ஜொமை – விமர்சனம்

 

பல்வேறு துறைகளில் கால் பதித்து முத்திரை பதித்தவர்கள் ஸெளராஷ்ட்ரர்கள். சினிமா துறையையும் விட்டு வைக்கவில்லை. அந்த காலத்திலேயே ராயல் டாக்கீஸ் முருகன் டாக்கீஸ் என படக் கம்பெனிகளை உருவாக்கி பல வெற்றிப் படங்களை தயாரித்து இன்றளவும் பேசப்படும் முன்னணி நட்சத்திரங்களை உருவாக்கியவர்கள் ஸெளராஷ்ட்ரர்கள். அந்த வரிசையில் கணினி தொழில் நுட்பம் வளர்ந்துவிட்ட இந்த காலக்கட்டத்தில் QUBE Digital முறையில் ஸெளராஷ்ட்ர மொழியில் திரைப்படம் எடுத்து திரைப்பட தணிக்கைக் குழுவின் சான்றிதழையும் பெற்று முந்தைய சாதனையாளர்களின் வரிசையில் நிமிர்ந்து நிற்கிறார் நீலாராவ் உலகின் முதல் ஸெளராஷ்ட்ர திரைப்படம் என்ற பெருமிதத்துடன்!


முழுக்க முழுக்க ஸெளராஷ்ட்ர மொழியிலேயே தமிழ் கலப்பில்லாமல் பேசி நடிக்க வைத்துள்ளார் இந்த படத்தில். திரைக்கதை சமுதாய பின்னணி கொண்டுள்ளது. கதாநாயகன் ஒரு பணக்கார வீட்டுப்பையன். எதார்த்தமான சுபாவம் கொண்டவன். தாய்வீட்டுப் பெருமை பேசும் அகங்காரமும் ஆணவமும் கொண்ட மனைவிக்கும் அவளோடு பொறுமையுடன் வாழ்ந்து வரும் கணவனுக்கும் பிறந்தவள்தான் கதாநாயகி. இருவருக்கும் திருமணம் நடைபெறுகிறது. இடையே பல நகைச்சுவை காட்சிகள். அதில் ஏற்படும் அவமானம். தனது கணவனுக்கு கல்வியறிவு புகுட்டி தொழிலதிபராக்கி ஸெளராஷ்ட்ர சமூகத்தில் ஒரு பிரமுகர் என்றளவில் உயர்த்திக் காட்டுகிறார் இதுதான் கதையம்சம்.


கதை ஏற்கனவே நாடகமாக அரங்கேறி சமூக மக்களால் ஏகோபித்த பாராட்தலைப் பெற்றது. அதை திரைப்படமாக்கி சாதனை புரிந்துள்ளார். கதாநாயகனாக நடிக்கும் வெங்கடேஷ் பாத்திரமறிந்து நன்றாக செய்துள்ளார். அகங்காரம் பிடித்த மாமியாராக வரும் உஷாவுக்கு ஒரு சபாஷ்! பொறுமையான கணவனாக வரும் சந்திரசேகர் இயல்பாக தனது நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார். மற்றபடி சரோஜா, கே.எஸ். சந்திரசேகரன், தர்மியா குமரேஷ் மற்றும் பலர் நடித்துள்ளனர். கதாநாயகி ஜெர்ஸா ஒரு மலையாளப் பெண். ஸெளராஷ்ட்ர மொழியை புரிந்து கொண்டு செய்துள்ளார். பாடல்கள் உள்ளன. ஆனால் ரசிகர்களை முணுமுணுக்க வைக்கவில்லை. அதில் கொஞ்சம் கவனம் செலுத்தியிருக்கலாம்.


ஒளிப்பதிவு குமரன், ஒலிப்பதிவு ஸ்கை மீடியா பாலன், பாடல்களுக்கு இசையமைத்த ராஜ்பாஸ்கர் தத்தம் துறையில் உணர்ந்து செயல்பட்டுள்ளனர். படத்தொகுப்பு பிரபாகரன் படத்தை உட்கார வைத்து பார்க்கச் செய்கிறார். ஆங்கிலத்தில் சப் டைட்டில் போடப்படுவதால் அரசு தொலைக்காட்சியிலும் தனியார் தொலைக்காட்சியிலும் ஒளிப்பரப்பும் வாய்ப்பு நன்றாக உள்ளது.

 

திரையிடப்பட்ட திரையரங்குகளில் அரங்கு நிறைந்த காட்சிகளாக நம் சமூக மக்கள் சென்று காணவேண்டும். அடுத்தடுத்து நிறைய ஸெளராஷ்ட்ர மொழி திரைப்படங்கள் நவீன தொழில் நுட்பத்துடன் வரவேண்டும். அதற்கு ஹெட்3டெ3 ஜொமை ஒரு முன் மாதிரியாக இருக்கட்டும். –ஆசிரியர்.


 

தொடர்ந்து ஹெட்3டெ3 ஜொமை படத்திலிருந்து சில காட்சிகளை காணுங்கள்.


 

User Comments
Ramkumar Td
heroine onte kerala pedkee...... what happend to saurashtra girls????????????????
Information
Name
Comments
 
Verification Code
3 + 9 =