Sourashtra Time
NOW AVAILABLE IN READY STOCK. RUSH YOUR ORDER FOR hiinun caLisye, hitavun caLisye and cunuk caLisye for Rs. 250/- ONLY.
Advertisement
gOthru charithru...18 16-01

கோ3த்ரு சரித்ரு கே4ரு நாவுந்

தொகுத்தளிப்பவர்

சூர்யாஞானேஸ்வர்

22. மார்கண்டேய மகரிஷி

பிருகு மகரிஷியின் பேரன் மிருகண்டு. இவர் தனது வம்சம் தழைக்க புத்திரபாக்கியம் வேண்டி சிவபெருமானை நோக்கி தவம் புரியத் n;தாடங்கினார். இவருடைய தவத்தை மெச்சி சிவபெருமான் காட்சி தந்தார். வேண்டிய வரத்தை கேட்கும்படி கூறினார். தனக்கு வாரிசு இல்லாத குறையை சொல்லி குழந்தை பாக்கியம் கிடைக்க அருளும்படி வேண்டினார் மிருகண்டு. அப்போது சிவபெருமான் அறிவும் பக்தியும் வைராக்கியமும் நிறைந்து பதினாறு வயதுவரை இந்த பூவுலகில் வாழும் குழந்தை வேண்டுமா அல்லது அனைத்து தீய ஒழுக்கங்களுடன் நீண்டகாலத்திற்கு வாழும் குழந்தை வேண்டுமா என்று கேட்டார். அதற்கு மிருகண்டு நல்ல ஒழுக்கத்துடன் அனைவரும் போற்றுகின்ற நிலையில் பதினாறு வயதுவரை பூவுலகில் வாழும் உத்தமமான குழந்தையே போதும் என்று சொல்ல அதன்படியே சிவபெருமான் வரம் அருளினார். 
சிவபெருமானின் திருவருளால் பிறந்த அந்த குழந்தைக்கு மிருகண்டு மார்க்கண்டேயர் என்று பெயரிட்டு வளர்த்து வந்தார். சிறு வயதில் சகல சாஸ்திரங்களையும் பயின்று மேதாவியாக திகழ்ந்தார். நல்லொழுக்கங்கள் நிறைந்து அனைவராலும் பாராட்டும்படி வாழ்ந்து வந்தான். பதினைந்து வயது நிறைந்தவுடன் மிருகண்டு மிகவும் மனம் வருந்தினார். தன்னுடைய பிள்ளைக்கு ஆயுள் முடிந்துவிடுமே என்ற கவலையில் மூழ்கியிருந்தார். தந்தையின் வருத்தத்தை உணர்ந்து மார்க்கண்டேயன் காரணம் கேட்டார். அவரும் மார்க்கண்டேயனின் பிறப்பின் ரகசியத்தைக் கூறினார். தந்தைக்கு ஆறுதல் சொல்லிவிட்டு மார்க்கண்டேயன் சிவபெருமானை நோக்கி தவவாழ்க்கையை மேற்கொண்டார். 
சதாசர்வ காலமும் சிவபூஜையில் இருந்து வந்தார். பதினாறு வயது பூர்த்தியாகும் நாளில் எமதர்மர் மார்க்கண்டேயனின் உயிரை எடுக்க பாசக்கயிற்றை வீசுகிறார். சிவபூஜையிலு; ஈடுப்பட்டிருந்த மார்க்கண்டேயனோ சிவலிங்கத்தை கட்டிப்பிடித்தான். எமதர்மனின் பாசக்கயிறு சிவனையும்; சேர்த்து பிணைத்தது. இதனால் கோபத்தால் உக்கிரமான சிவபெருமான் எமனை தண்டிக்க முற்பட்டார். தேவர்கள் ஒன்றுசேர்ந்து சிவனை துதித்து சினம் தணியச் செய்து சாந்தமடையச் செய்தனர். சிவபெருமானும் எமனை மன்னித்து மார்க்கண்டேயனை என்றும் பதினாறாக சிரஞ்ஜீவியாக வாழ அருள்புரிந்தார். 
உலகில் சிரஞ்சீவியாக உள்ளவர்கள் ஏழுபேர்தான். அவர்கள் துரோணாச்சாரியார் மகன் அஸ்வத்தாமன்ää மகாபலி சக்ரவர்த்திää மார்க்கண்டேயர்ää ஆஞ்சநேயர்ää விபீஷணன்ää கிருபாச்சாரியார்ää பரசுராமன் ஆகியோர்.
பதினாறு வயதுடன் நீண்ட காலம் பூவுலகில் வாழ்ந்த வாழ்க்கை மார்க்கண்டேயருக்கு வெறுத்து விட்டது. மீண்டும் சிவபெருமானை நோக்கி தவமிருந்தார். சிவபெருமானும் இவருடைய கடுமையான தவத்திற்கு இரங்கி காட்சி தந்தார். குழந்;தாய் உனக்கு என்ன வரம் வேண்டுமோ கேள் என்றார். அதற்கு மார்க்கண்டேயன் தனக்கு மோட்சம் வேண்டும் என்றும் அதனை அருளும்படியும் கோரினார். அதற்கு சிவபெருமான் மோட்சம் அளிப்பது ஸ்ரீமந் நாராயணன். அவரை சரண் அடைந்தால் உனக்கு மோட்சம் கிட்டும். அதற்கான ஞானத்தை நான் உனக்கு உபதேசம் செய்கிறேன். அதனைக் கொண்டு எம்பெருமான் நாராயணனை சரணடைந்து மோட்சம் அடைவாயாக என்றார். மார்க்கண்டேயரும் எம்பெருமான் ஸ்ரீமந்நாராயணனை வேண்டி வணங்கி சரணடைந்து மோட்சம் பெற்றார். 
திருச்சியில் உள்ள நான்காவது திவ்ய தலமான திருவெள்ளரையிலும் குடந்தை உப்பிலியப்பன் சந்நிதி கருவறையிலும் மார்க்கண்டேயர் சிலாரூபமாக காட்சியளிக்கிறார். இம் மகரிஷியின் ஆஸ்ரமத்தின் சிஷ்ய ப்ரசிஷ்ய வழி வந்தவர்கள் மார்க்கண்டேய கோத்திரத்தவர்கள் ஆவர்.
மார்க்கண்டேயர் கோத்திரத்தின் ஸ்லோகம்:
ஸ{ப்4ரம் த்ரிதாரா கு3ருதே3வதாக்2யோ
புமாநஜோயோநி க3ணம்து தே3வ:
அஸ்வத்த2வ்ருகே;ஷா ஜலகாக பக்ஷீ
ம்ருகண்டு3 புத்ரோ ஆங்கீ3ரஸாருணீநாம்
மார்க்கண்டேயர் கோ3த்ரம்:
வேத்3 : யஜுர் வேத்3
ஸ{த்ரு : ஆப3ஸ்தம்ப3 ஸ{த்ரு
நட்சத்ரு : புஷ்ய
கோ3த்ரு : மார்க்கண்டேயர் கோத்ரம்
தே3ஸ் : ஸெளராஷ்ட்ர தே3ஸ்
கா3ம் : ஸோமநாதபுரி
தே3வதொ : தேவகுரு வியாழன்
க3ணம் : தே3வ க3ணம்
வாஹநொ : பெ4ண்டு3
பட்சி : பநிம்கவ்ளொ
விருட்சம் : பிம்போள் ஜா2ட்
வாந் : ஸலகவான்
ஆரிஷம் : பஞ்சாரிஷம்
புpரவரம ; : பா4ர்க3வää ஸ்யவனää அப்நுவான்ää ஒளர்வää ஜமதக்னி ஆகிய                                                                           கோத்திரங்கள் பஞ்சரிஷ ப்ரவரம்.
மார்க்கண்டேயர் மகரிஷிக் செரெ கே4ருநாவுந்:
1. நாட்டாமை
2. கவி நாட்டாமை
3. சி.நாட்டாமை
4. புள்ளையார் நாட்டாமை
5. மல்லி நாட்டாமை
6. லிங்க நாட்டாமை
7. ராஜ நாட்டாமை
8. தருமியா
9. செம்பு
10. சோமி
11. அம்பலம்
12. அய்யல்லு
13. அம்பாசமுத்திரம்
14. செலுக்கா
15. சங்கு
16. சொக்காணி
17. கௌடு
18. வேலா
19. தொள்ளே
20. பீமு
21. வீரசேகு
22. முரஹரி
23. நாகு
24. பத்ருகொவுண்டா
25. கொவுண்டான்
26. கிரி
27. குருகுட்டு
28. பளிஞ்சி
29. குருமூர்த்தி
30. கிரி அம்பலம்
31. ஸெளளின்
32. லம்ப3 பாதுன்
33. ஸலகவா
34. லிங்கம்
35. ஜோகி
36. சொலுகுவான்
37. ஜெடல்னு
38. மது3ரகெரின்
39. விஷேகுன்
40. பால்ரியான்
இதுதவிர வேறு விடுப்பட்ட வீட்டுப்பெயர்கள் இருந்தால் தெரியப்படுத்தி இப்பணியினை முழுமையடையச் செய்ய வேண்டுகிறேன்.

ப்ரவரம் : பா4ர்க3வ, ஸ்யவன, அப்நுவான், ஒளர்வ, ஜமதக்னி ஆகிய                                                                           கோத்திரங்கள் பஞ்சரிஷ ப்ரவரம்.

மார்க்கண்டேயர் மகரிஷிக் செரெ கே4ருநாவுந்:

1. நாட்டாமை

2. கவி நாட்டாமை

3. சி.நாட்டாமை

4. புள்ளையார் நாட்டாமை

5. மல்லி நாட்டாமை

6. லிங்க நாட்டாமை

7. ராஜ நாட்டாமை

8. தருமியா

9. செம்பு

10. சோமி

11. அம்பலம்

12. அய்யல்லு

13. அம்பாசமுத்திரம்

14. செலுக்கா

15. சங்கு

16. சொக்காணி

17. கௌடு

18. வேலா

19. தொள்ளே

20. பீமு

21. வீரசேகு

22. முரஹரி

23. நாகு

24. பத்ருகொவுண்டா

25. கொவுண்டான்

26. கிரி

27. குருகுட்டு

28. பளிஞ்சி

29. குருமூர்த்தி

30. கிரி அம்பலம்

31. ஸெளளின்

32. லம்ப3 பாதுன்

33. ஸலகவா

34. லிங்கம்

35. ஜோகி

36. சொலுகுவான்

37. ஜெடல்னு

38. மது3ரகெரின்

39. விஷேகுன்

40. பால்ரியான்

இதுதவிர வேறு விடுப்பட்ட வீட்டுப்பெயர்கள் இருந்தால் தெரியப்படுத்தி இப்பணியினை முழுமையடையச் செய்ய வேண்டுகிறேன்.

User Comments
Information
Name
Comments
 
Verification Code
4 + 8 =