Sourashtra Time
NOW AVAILABLE IN READY STOCK. RUSH YOUR ORDER FOR hiinun caLisye, hitavun caLisye and cunuk caLisye for Rs. 250/- ONLY.
Advertisement
munmaathiri maanavan

முன்மாதிரி மாணவன்

 

திருக்குறள் ஒப்பித்தல் போட்டியில் தமிழ்நாட்டில் இருந்து 36 மாணவர்கள் தேர்வு செய்து அவர்களைப் பாராட்டி கௌரவித்து ரூபாய் பத்தாயிரம் பரிசு வழங்கியுள்ளது. இப்பரிசு தமிழக முதல்வர் வழங்குவதாக இருந்தது. கடைசி நேரத்தில் மாறுதல் ஏற்பட்டு திருச்சி மாவட்ட ஆட்சியர் திருமதி. ஜெயஸ்ரீமுரளிதரன் அவர்களால் காசோலையாக வழங்கப்பட்டுள்ளது. அதைத்தான் படத்தில் காண்கிறீர்கள். இதில் நம் ஸெளராஷ்ட்ர சமூகத்தைச் சேர்ந்த மாணவன் பி. ஹரிலோசன் என்பதில் நமக்கு பெருமையாக உள்ளது. இந்தச் செய்தி தினமணி நாளிதழில் டிசம்பர் 10ஆம் நாள் வெளியாகியுள்ளது.

இவர் திருச்சி உறையூரைச் சேர்ந்தவர். ஹரிலோசன் முதல் வகுப்பிலிருந்து மூன்றாம் வகுப்பு பயிலும்வரை 1330 குறளையும் மனப்பாடம் செய்ததாக கூறியபோது கம்பீரம் பிரதிபலி;த்தது. இவருடைய பெற்றோர் ஜே. பெருமாள்-வனஜா இருவரும் சமையல் வேலை செய்து வருகின்றனர். இவருடைய படிப்புச் செலவிற்கும் மிகவும் சிரமப்பட்டுவரும் இவர்களை உற்சாகப் படுத்தும் விதத்தில் உறையூர் ஸெளராஷ்ட்ர அலுவலர்கள் சங்கம் உதவி வருவதோடு தமிழ்நாடு மின்வாரியத்திலிருந்து ஓய்வுப்பெற்ற முதுநிலை பொறியாளர் ராமகிருஷ்ணன் இவருடைய டிரஸ்டு மூலமாக +2வரை படிக்க வைக்க தத்தெடுத்துள்ளார் என்பதை ஸெளராஷ்ட்ர அலுவலர்கள் சங்க செயலாளர் ரெங்கநாதன் பெருமையாக கூறினார். 


மேலும் அவர் ஹரிலோசன் பற்றி கூறிய செய்தி பிரமிக்க வைத்தது. ஆறாம் வகுப்பு முதல் திருப்பாவை திருவெம்பாவை ஆத்திச்சூடி கொன்றைவேந்தன் மூதுரை நல்வழி போன்றவைகளையும் மனப்பாடம் செய்து ஒப்பிக்கும் திறன் கொண்டவராக உள்ளதாக குறிப்பிட்டார். 9ஆம் வகுப்பு பயிலும் ஹரிலோசன் இதனை நிமிர்ந்து கம்பீரமாக உறுதிப்படுத்தும்போது பெருமையாக இருந்தது. நம் சமூகத்தின் மற்ற மாணவர்களும் ஹரிலோசனை முன்மாதிரியாகக் கொள்ளவேண்டும்.


ஹரிலோசன் மென்மேலும் பல சாதனைகள் புரிந்து தனது திறமையால் சமூகத்தைப் பெருமையடையச் செய்யவேண்டும் என ஸெளராஷ்ட்ர டைம் மனதார வாழ்த்துகிறது.

 

User Comments
Information
Name
Comments
 
Verification Code
3 + 7 =