Sourashtra Time
NOW AVAILABLE IN READY STOCK. RUSH YOUR ORDER FOR hiinun caLisye, hitavun caLisye and cunuk caLisye for Rs. 250/- ONLY.
Advertisement
chalni-kaLatni 12-16

மதுரையில் சென்ற 26 மற்றும் 27-11-2016 தேதிகளில் காமராசர் சாலையிலுள்ள ஸெளராஷ்ட்ர ஆண்கள் மேனிலைப் பள்ளியில் ஸெளராஷ்ட்ர சினிமா திந்நாள் (Sourashtra Film Festival) நடைப்பெற்றது. இந்த விழாவினை ஓ.வி.ஆர்.எம்.ராஜ்குமார்கே, ஆர்.கோபிநாத், வி.வி.சுரேஷ் ஆகியோர் ஒருங்கிணைந்து செய்திருந்தார்கள். விழாவிற்கு மதுரை ஸெளராஷ்ட்ர சபைத் தலைவர் பாலாஜி தலைமை தாங்கினார். ராஜ்குமார் வரவேற்புரையாற்றினார். வர்த்தகக் கண்காட்சியினை பாளையங்கோட்டை அனந்தராமன் தொடங்கிவைத்தார். ஸெளராஷ்ட்ர மத்ய சபையின் முன்னாள் பொதுச்செயலாளர் ராமலிங்கம், திரைப்படத் துறையின் தணிக்கைக் குழு உறுப்பினரான ராமலிங்கம் ஸெளராஷ்ட்ர மத்ய சபை பொதுக்காரியதரிசி ராமசுப்பிரமணியன் பாரதிய ஜனதா கட்சியின் தமிழ் மாநில மகளிர் அணித் தலைவர் திருமதி. மகாலட்சுமி ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்கள். ஒருங்கிணைப்பாளர் சுரேஷ் நன்றி கூறினார்.

இந்த விழாவின் இரண்டு நாட்களில் ஹம்ஸத்வநி, பாண்டுரெங்கா, கெ4நம், ஹந்தா3ர் மொந்நு, தே3நாத்தொ ஸொண்ணா, கீஷ்டு, ஜெஞ்ஜம், ஹாதுமகோ, ஸிம்மாஸநம் போன்ற திரைப்படங்கள் திரையிடப்பட்டது. மேலும் புதிதாக தயாரிக்கப்பட்ட ஜவஹரின் ப்ரேவ் வெக்கிலி மற்றும் விநோத்கண்ணா தயாரிப்பில் முதல் 3D படமான தந்தூர் மெநிக் திரையிடப்பட்டது.


வீடியோ திரைப்படங்கள் குறும்படங்கள் முழுநீளத் திரைப்படங்கள் என சுமார் பத்துக்கும் மேற்பட்ட படங்களை ஸெளராஷ்ட்ர மக்கள் கண்டுகளித்தனர்.


திருச்சி உறையூரிலுள்ள சௌராஷ்ட்ர அலுவலர்கள் சங்கத்தின் 24வது ஆண்டு துவக்க விழா 2017ஆம் ஆண்டில் முதல் நாளில் உறையூர் சௌராஷ்ட்ர மகாஜன சபா சத்திரத்தில் நடைபெற உள்ளது. இவ்விழாவிற்கு கிருஷ்ணமாச்சாரி தலைமை வகிக்கவும் தாத்ரா. பரந்தாமன் முன்னிலை வகிக்கவும் இசைந்துள்ளார்கள். பொறியாளர் தாத்ரா. ராகவாச்சாரி சிறப்பு விருந்தினராக கலந்து கொள்ளவிருக்கிறார். 

 

User Comments
Information
Name
Comments
 
Verification Code
2 + 7 =